Wednesday, October 22, 2014

கத்தி (2014) - மாற்று கமர்சியல் சினிமா


கொஞ்சம் சென்ஸிடிவ்வான பிரச்சினைகளை கையாளும் விதத்தை அடிப்படையாகக் கொண்ட புத்திசாலித்தனமான திரைக்கதைகள் சொல்லிஅடிக்கும் கில்லியாக ஹிட்டாகி வருவது நம் தமிழ்சினிமாவின் வரலாறு...

ரசிகனை பெரியதாக லாஜிக் பார்க்க விடாமல் கலகலவென இருக்க வைத்து கொஞ்சமாய் உள்ளூர உசுப்பேத்தி சமூக பிரச்சினைகளை பொதுப்புத்தி அனுகுதல்களில் இருந்து விலகி சற்றே மாறுபட்டு புத்திசாலித்தனமாக கையாளும் ஹீரோவை  மையப்படுத்தி கொணாடாட வைக்கும் படமே கத்தி..

எங்க  வீட்டுப்பிள்ளை, ராஜாதி ராஜா போன்ற வழக்கமான காண் ஒற்றுமை நாயகர்களை கொண்ட, வழக்கமான ஆள் மாறாட்ட  கதைதான்,  என்பதை பற்றிய யோசனை எல்லாம் சாவகாசமாக தியேட்டரை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் மட்டுமே தோன்றுமாறு இருக்க வைத்தது தான் இங்கே முருகதாஸின் மேஜிக் ..

கலை சினிமாவை கமர்சியல் சினிமாவாக்கும் கலை  முருகதாஸை போன்ற சிலருக்கே சொந்தமானது, மெமண்டோவை ஆகச்சிறந்த கமர்சியல் கஜினியாக்கி இந்தியாவை திக்குமுக்காட வைத்தவர்,  இதிலும் அதே பானிதான்.. சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்தியில் வெளியான  பீப்லிலைவ் என்றோரு நகச்சுவை கலந்த கலை சினிமாவை சுட சுட மசாலா கலந்து கமர்சியல் சினிமாவாக்கி விருந்தே படைத்திருக்கிறார் முருகதாஸ்..

இரண்டு படங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்ட கதைகள், இரண்டிலும் மீடியாக்களின் டிஆர்பி பசியை துகிலுரித்திருக்கிறார்கள், இப்படி சமூக பிரச்சினைகளை கமர்சியல் சினிமாவில் எவ்வளவு உணர்ச்சிகரமாக சொன்னாலும் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மறந்துபோகும் அதுதான் அதன் ஒரே சாபக்கேடு.. 
இருக்கட்டும் தமிழ்சினிமாவின் அஞ்சான் போன்ற அரைத்த மாவு கமர்சியல் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு  டெக்னிக்கலாக மிரளச்செய்த இந்த கத்தியை இப்போதைக்கு வரவேற்போம் இனி கமர்சியல் சினிமாவின் தரம் இதன் மூலம் மாறும் என்ற நம்பிக்கையோடு..

விஜய்க்கு வருவோம் சமகாலத்தில் எந்த ஒரு நடிகருக்கும் அரசியல் ரீதியாக இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் அவர் சொல்வதில்லை என்ற போதும் அவரை கொண்டாடும் மக்களின் பொருட்டு சற்றே கலவரமாகும் அரசியல் தலைகளின் வெளிப்பாடு அவரை இந்த பாடு படுத்துகிறது.. இருந்தும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் அவரை சூழ்ந்து கொண்டாலும் அவரின் ஆன் ஸ்கீரின் எனர்ஜி என்பது வேற லெவல்.. அந்த லெவலின் எல்லை வரை கூட்டிச்சென்ற சில படங்கள் எல்லாமே அவரின் மாஸ் ஹிட்டுகளாக அமைந்திருக்கின்றன அதே கதைதான் கத்தியிலும் , கில்லி,போக்கிரி,துப்பாக்கி வரிசையில் கலந்துகட்டி அடிக்கும் விஜய் எனர்ஜி சினிமாவே இந்த கத்தி..

பொதுவாக நல்ல மாஸ் நடிகனுக்கு அந்த துறு துறு எனர்ஜி மிக அவசியம் அதில் எந்த குறையும் அவர் எந்த படத்துக்கும் வெளிக்காட்டாமல் இருந்ததில்லை சமயங்களில் கைகூடாமல் போன லாஜிக் இல்லாத திரைக்கதைகளில் அந்த எனர்ஜி இருந்தும் வீனாகிப்போன பல சினிமாக்கள் 
உண்டு, போகட்டும் எல்லாம் கைகூடிய இந்த திரைக்கதையில் அந்த எனர்ஜி ரசிகனை தொற்றிக்கொண்டு ஒரு ஜகஜால 10000 வாலா பட்டாசாக வெடித்து தள்ளியிருக்கிறது என்பதே மறுக்க முடியாத நிஜம்...

ஜீவானந்தம் - மென்சோகம் இழைந்தோடும் விவசாயிகளின் பங்காளன்,
கதிரேசன் - துறு துறு கிரிமினல் இளைஞன் என இரண்டு விஜய்கள்,
விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதர பிரச்சினை,
கார்ப்ரேட் கம்பெனி CEO வின் சுயநலம், மீடியாக்களின் மீதான சவுக்கடி, இவற்றை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையை மல்டிப்பிளக்ஸ் ரசிகன் முதல் டெண்டுகொட்டாய் ரசிகன் வரை விசிலடித்து கைதட்டி கொண்டாடும் ட்ரீட்மெண்டில் வந்திருக்கும் படமே கத்தி

விஜய் எனர்ஜி + முருகதாஸின் புத்திசாலித்தனம் + அனிருத்தின் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான மேஜிக்கல் மியூசிக் கலந்த கம்ப்ளிட் ஹிட் பேக்கேஜ்தான் இந்த கத்தி.. 

தமிழ்சினிமாவின்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் போட்டியில் கத்திக்கென ஸ்பெஷலாக ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது..

வாழ்த்துக்கள் கத்தி & டீம் 

தோழமையுடன்
கர்ணாசக்தி.


7 comments:

  1. ஏன் நான் போட்ட கமெண்ட் வரலை?

    ReplyDelete
  2. ஜவ்வு மாதிரி திரைக்கதையப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே பாஸ்! விஜய் ஃபேன் என் பையன். பாதிப்படம்கூட பாக்காம எழுந்து போயிட்டான்!

    ReplyDelete
  3. பீப்ளி லைவ் எவ்வளவு நல்லாருந்தது! அது கூட கம்பேர் பண்ணாதிங்க :P waste of time!

    ReplyDelete
    Replies
    1. பீப்ளி லைவ் கூட கம்பேர்லாம் பண்ணல அது கலை சினிமா நேர்த்தியோட சொன்னதும் இது கமர்சியல் சினிமா நேர்த்தியோட சொன்னதும் ஒரே விசயம்...அதை மட்டும்தாம் கம்பேர் பண்ணி சொன்னேங்க..

      விஜய் படம்லாம் குழந்தைகளுக்கு ஏழெட்டு பாட்டு சண்டை இருந்தா போதும் ஆனா பெரும்பான்மை மக்கள் கிட்ட போய் சேரனும்னா கத்தி மாதிரி சினிமாதான் சரி ;-)

      Delete
  4. லாஜிக் 0! Dead slow! கருத்து தான் முக்கியம்னா யாரோ சொன்ன மாதிரி sms பண்ணிருக்கலாம்! என்னைப் பொறுத்தவரை படம் பாக்கறதே entertainment காகதான்! மத்தபடி நான் விஜய் ஹேட்டர்லாம் இல்லை! படம் பாக்க நினைச்சதே ARM படம்ங்கிறதுக்காகதான்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாருமே சினிமாவ எண்டர்டெய்மெண்ட்டாதானே எடுக்கிறாங்க.. ஒரு சிலர் இப்படி கருத்தா எடுத்துட்டு தான் போகட்டுமேங்க.. இந்த படத்துனால நடந்த நல்ல விசயம் என்னன்னா நம்மூர் பசங்களுக்கு கம்யூனிசம், விவசாயம், கார்ப்ரேட் பத்தின சின்ன புரிதல் அல்லது பரிச்சயம் வந்திருக்கு இது நல்ல விசயம்தானே ? நமக்கு வராத கேளிக்கை படங்கள் இருக்கா எப்படியும் இது இல்லன்னா இன்னொன்னு வர போகுதுதானே சியர்ஸ்ங்க :))))

      Delete