Sunday, January 12, 2014

ஜில்லா - ஒரு தளபதி ரசிகனின் பார்வை




ஜில்லா -ட்போரோ யோவ் தளபதி அட இத்னி வருசமா சினிமாவுல 
இருக்க நேஷன்னு ஒருத்தன் உன்ட எந்திரன் கதைய 
உல்டா பன்னி சொல்லிருக்கான் நீயும் நடிச்சிட்ட ??:( போய்யா நீயும் உன் செலக்சனும்)

அதாவது டாக்டர் லால்(வசீகரன்)ஒரு சூப்பர் விஜய்ய(சிட்டி ரோபோ)
உருவாக்குறார் உல்டா என்னன்னா இதுல வசீகரனும்(லால்) சிட்டியும்(விஜய்) கெட்டவங்க...
வழக்கம் போல இன்டர்வல் வரை விஜய் (சிட்டி) சாகசமும் லவ்வும் பன்னுது அப்புறம் ஒரு தீ விபத்துல குழந்தைகள காப்பாத்தும் போது அதுக்கு உணர்ச்சி (நல்லவன்-ரெட் சிப்) வந்துருது..
அப்புறம் டாக்டர் லால்(வசீகரன்)தான் கெட்டவன் ஆச்சே ஆப்போசிட் சிட்டி நல்லவன் சோ ரெண்டு பேரும் எதிரி ஆகிடறாங்க - இன்டர்வல்

அப்புறம் விஜய் (ரெட்சிப்போட்ட சிட்டி ) நிறைய நல்லது பன்னுது 
அதனால லால் (வசீகரன்) காண்டாகிடறார் 
அப்பாலிக்கா ரெட் சிப்ப கழட்ட லாலும் லாலுக்கு ரெட் சிப்ப மாட்ட விஜயும் ட்ரை
பண்றாங்க ஸப்பா :( 
ஆனா இந்த எந்திரன்ல கிளிமாக்ஸ்ல தான் ப்ரொபசர் போரா 
வாரார்(சம்பத்)எல்லா தமிழ் படம் மாதிரியே 
போராவ சிட்டி அழிச்சு அந்த நல்லவனுங்குற ரெட் சிப்ப டாக்டர் லாலுக்கு (வசீகரன்)
மாட்டிவிட டாக்டர் லாலும் தமிழ் சினிமா விதிப்படி கெட்டவனுங்குற குணத்த ஒவ்வொன்னா கழட்டி விடுறார் அப்புறம் நடுவுல கொஞ்சம் காஜல்,மஹத், பூர்ணிமா,சூரி எல்லாம் போட்டா ட்போரோ(ரோபோட்) எனும் ஜில்லா ரெடி உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் 
                   


 சினிமான்னா என்னான்னு தெரியாத எனக்கே தெரியுது 25வருசமா நீ இருக்க என்னய்யா தளபதி இது ??

பிகு: ஹலோ தல பேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சிலாம் ஆவாதீங்க அங்கிட்டும் அதேதான் முரட்டுக்காளை வானத்தைபோல எல்லாம் கலந்து வந்த வெங்காயம்தான் வீரம் 
இப்படிக்கு 
தலயும் தளபதியும் விஜய்சேதுபதி போன்றவர்களிடம் தோற்றுபோகும் காலத்தை 
பார்க்க விரும்பாத தளபதிரசிகன் .







ஒலிக்குறிப்பு





அடர்
வனாந்திரமொன்றில்
கூவிப்போன
பறவையின் குரலுக்கும்
பெருபணிக்காற்றில்
கிறீச்சிட்டு திறந்த
சாளரத்திற்கும்
கூடற்பொழுதில்
சரீரமெங்கும் வருடிய
வளையல்களுக்கும்
ஒரே ஸ்வரம் !!

Sunday, January 5, 2014

மழையாவது




முன்பு பெய்த மழை 
நதியானது என் பால்ய  
கப்பல்களை மிதக்க வைத்து  

பின்னொருமுறை 
பெய்த மழை 
கவிதையானது 
என்னோடு அவளையும் 
நனைக்க வைத்து 

மீண்டுமொருமுறை பெய்த 
மழை சனியன் ஆனது 
என் வேலை நேர்முகத்தை 
தவற வைத்து 

அதற்கடுத்த முறை 
பெய்த மழை 
இரக்கமற்றவன் ஆனது 
சாலை ஒன்றில் என் 
வாகனத்தை செயலிழக்க 
வைத்து 

இந்தமுறை பெய்த மழை 
மத்தாப்பானது 
மகளின் சின்னஞ்சிறு
கைகளில் தெரித்து 

அவசரஅவசரமாக அவளிடம்
மழையை மழையாகவே
எப்போதும் ரசிக்க 
சொன்னேன்
அவள் காதில் வாங்கவில்லை 
கைகளில் 
ஏந்தி கொண்டிருந்தாள் மழையை !!!