Wednesday, May 28, 2014

HOW OLD ARE YOU (மலையாளம்) - 2014


இந்த உலகத்துல கடிகாரத்து மேல சந்தேகப்பட்டு அலாரம்
பதறியடிக்கிறதுக்கு முன்னமே பதறியடிச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவன் அம்மாதான் அப்படி கஷ்டப்பட்டு அவங்க எழுந்திரிக்கறது தன்னோட குழந்தைக கணவர்களுக்கு உதவி செஞ்சு அவங்க வேலைகளுக்கு துணை நிக்கதான்...அப்படி பட்ட அம்மாக்கள் எல்லாருக்குமே அவங்க சின்ன வயசுல வாழ்க்கைய பத்தின ஏதாவது ஒரு கனவு இருந்திருக்கும் அதையெல்லாம் மறந்து குடும்பத்துக்காகவே தன்ன அர்ப்பணிக்கிற கோடிக்கணக்கான அம்மாகள்ள ஒருத்தங்க தான் இந்த படத்தின் நாயகி நிருபமா ராஜீவ் (மஞ்சுவாரியார்) 

கல்லூரில தூடுக்குத்தனமா தைரியமா இருக்குற ஒரு பொண்ணு அப்பா இறந்ததும் அவர் வேலை இவங்களுக்கு கிடைக்க பின்னாடி கல்யாணம் குழந்த குடும்பம்னு அவங்க கனவுகள சகிச்ச்சிட்டு குடும்பம் சார்ந்து கொஞ்சம் பதட்ட பட்டா எப்பாவது வர பிளட் பிரசரோட அவங்க வாழக்கை நகருது... இவங்க கணவருக்கும் பொண்ணுக்கும் அயர்லாந்து போகனும்னு கனவு இவங்களுக்கு 36வயசானதாலயும் தகுதியான படிப்பும் இல்லன்னு அயர்லாந்து எம்பசி இவங்க விசா அப்ளிகேசன் இன்டர்வியுல பெயில் ஆக்கிடறாங்க.. நம்ம கனவுக்கு தடையா இருக்காளேன்னு அப்பாவும் பொண்ணும் நிருபமாவா வெறுக்கிறாங்க இப்படியான ஒரு சூழ்நிலையில ஸ்கூல் பங்க்சனுக்கு வந்திருந்த ஜனாதிபதி கிட்ட நிருபமா பொண்ணு ஒரு கேள்வி கேக்கிறாங்க அந்த கேள்வில இம்ப்ரஸ் ஆன ஜனாதிபதி இத யார் சொன்னதுன்னு கேக்க பொண்ணு அம்மான்னு சொல்ல ஜனாதிபதியுடன் பிரேக் பாஸ்ட் சாப்பிட நிருபமாவுக்கு ஒரு வாய்ப்பு வருது..


அப்படி ஜனாதிபதிய பாக்க போன இடத்துல அந்நிய சூழல்களால பதட்டமாகி ஜனாதிபதிய பாத்ததும் மயக்கம் போட்டு விழுந்து சொதப்பி வைக்க ஆபீஸ்ல வீட்ல எல்லாரும் கிண்டல் பண்றாங்க... அப்பாவும் பொண்ணும் உனக்கு தான் எந்த கனவும் இல்ல எங்க கனவுகளுக்கு இடைஞ்சாலா இருக்காத ஒரு வருசத்துல உன்ன அங்க கூட்டி போறோம் அதுவரை நீ இந்தியாவுலயே இருன்னு சொல்லிட்டு  இவங்கள விட்டுட்டு அயர்லாந்து போறாங்க 

இப்படி வாழ்கை சூன்யமான ஒரு சூழ்நிலையில இவங்க கல்லூரி தோழிய சந்திக்கிறாங்க காலேஜ்க்கு ஒரு கம்பியூட்டர் லேப் வேணும்னு போராடி வாங்கி தந்த பொண்ணு அந்த போராட்ட குணம்லாம் என்னாச்சு இப்ப உன்ன எது தடுக்குது வயசா? அத தூக்கி போடுன்னு தைரியம் தராங்க சுயநலமா அவங்க கனவு பின்னாடி அம்போன்னு விட்டு போன குடும்பத்த கிண்டல் பண்ண ஆபீஸ் ஸ்டாப்ஸ எல்லாம் எப்படி மதிக்க வைக்கிறாங்க .. எந்த ஜனாதிபதிய பாத்து மயங்கி விழுந்தாங்களோ அதே ஜனாதிபதி இவங்களா எப்படி மறுபடியும் சந்திக்க கூப்பிறாங்கறதுதான் மீதி கதை.... 

கோச்சாபீம், விஜய்னா, தல, சிவகார்த்திகேயன்,கார்த்தின்னு நீங்க கொண்டாடிக்கிட்டிருக்குற இவங்க எந்த ஒரு படமும் பெண்கள மதிச்சதும் இல்ல உங்களுக்கான படமும் இல்ல.... நீங்க தலையில தூக்கி வச்சு கொண்டாடவேண்டிய படம் இந்த How Old Are You...உங்களப்பத்தின உங்களுக்கான படம்...கொண்டாடுங்க பெண்களே இது ஒவ்வொருத்தியும் சாமிடா சத்தம் போட்டு சொல்ற படம்....
அட்லீஸ்ட் பாக்கவாது செய்வீங்கங்குற நம்பிக்கையில .

HOW OLD ARE YOU ??
ITS DOESN'T MATTER..... FOLLOW YOUR DREAM...
WHO DECIDE EXPIRY DATE OF WOMEN'S DREAM ??





Wednesday, May 21, 2014

இதுதான் மகாபாரத கதை


உங்கள் விஜயில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மிக பிரம்மாண்டமான மகாபாரதம் விளம்பரம் பாத்து வந்த கொசுவத்தியின் நீட்சிதான் இந்த பதிவு 

இந்த பெரிய இதிகாசம் பின்னால் ஒரு காத்திருப்பு இருந்தது உஸ்ஸ்ஸ் மூச்சு விட்டுக்கோங்க அதே டவுசர் காலத்துல தான்...இப்பல்லாம் வீட்டுக்கு 2 டிவி 2 சிஸ்டம்னு இருக்கு முன்ன பத்து தெருவுக்கு 5டிவின்னு இருந்த காலகட்டம் (கலாநிதி மாறன் பில்கேட்ஸ்லாம் காலேஜ் போய்கிட்டிருந்திருப்பாங்க போல) அப்படி 5டிவிலையும் பன்னிக மாதிரி கூட்டமா வராம சிங்கம் மாதிரி சிங்கிளா வந்த ஒரே சேனல் தூர்தர்ஷன் மட்டும்தான் இதுல செய்திகள்,ஊமைசெய்திகள்,எதிரொலி,வயலும் வாழ்வும்,ஒலியும் ஒளியும்,இந்தி படம், தமிழ்ப்படம்னு ஒருநாளைக்கு ஒன்னா சோசியல்,பசுமை,இசை,சினிமான்னு இந்த சிங்கம் சிங்கிளா புரட்சி செஞ்சது.. 

அப்போதான் என்ன மாதிரி குட்டிபசங்களுக்கு புரட்சி பன்ண ஒவ்வொரு ஞாயிறும் சக்திமான் வந்தார் இவர்தான் எங்களுக்குன்னு அப்ப இருந்த ஒரே சோட்டா பீம் (ஆனா பாக்க தடிமாடு மாதிரி இருப்பார்) இதுல பிரச்சின என்னன்னா இவர் அந்த பாழா போன மகாபாரதம் முடிஞ்சு அப்பாலிக்காதான் வருவார்.. 

எங்க தெருவுக்குன்னு கடவுளால் விதிக்கப்பட்ட டிவி ஏரியாவுல ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வூட்ல இருந்தது பிரண்ட் வீடுங்றதுனால ரெண்டு கதவு வச்சு மூடு அந்த டிவிக்கு 10 அடி முன்னாடி வரைக்கும் உக்கார்ந்து பாக்குற உரிமை எனக்கு இருந்தது என் பிரண்ட் வீடு என் உரிமை..அதும் மகாபாரதம் தொடங்குறதுக்கு முன்னமே போனாத்தான் அந்த இடம் கிடைக்கும் இல்லன்னா ஒட்டகசிவிங்கி மாதிரி சர்க்கஸ் பன்னித்தான் பாக்கணும் அப்படி அடிச்சு பிடிச்சு என் இடத்தை உறுதி செஞ்சு மகாபாரதத்த சகிச்சிக்கலாம்னு உக்காந்தா அது முதல்ல 
"நான்தான் காலம்னு தொடங்கி சம்பவாமி யுகே யுகேஏஏஏஏன்னு லெந்தா ஒரு டயலாக் முடிஞ்சு ஹேராம் படத்துல வர இசையில் தொடங்குதம்மா பீட்ல டைட்டில் சாங் ஓடி இதுதான் மகாபாரத கதைன்னு முடியும் அந்த 
டைட்டில்சாங் அதாவது ராஜ் டிவில படத்துக்கு நடுவுல விளம்பரம் போடுவாங்களே அவ்ளோ நீளம்.. 

அப்பாடான்னு புட்டத்த அழுத்தி உக்காந்தா எவனெவனோ இந்தி ஆர்டிஸ்ட்டுக செந்தமிழ்ல பேசி சாவடிப்பானுக அதுல பாருங்க இந்த சகுனின்றவன் மதன்பாப் உடம்புல நம்பியார் ஆவி புகுந்தாப்ல அருமை மருமகனேன்னு அடிக்கடி சிரிச்சு வெறுப்பேத்துவாப்ல 'பே'ன்னு விட்டத்த வெறிச்சு காத்திருந்தா ஒருவழியா மகாபாரதம் முடியும் இனி நம்மாளு வந்திடுவார்னு சுறுசுறுப்பா நிமிந்து உக்காந்தா கொய்ய்ய்ய்ய்ன்னு நாட்டாமை சரத்குமார் கவுண்டமணி காதுல அரையிற சத்தமும் ஒரு அம்புக்குறியும் டிவி ஸ்கிரீன்ல வந்து பொறுமைய சோதிக்கும் ஆனா தூர்தர்ஷன்காரங்க நல்லவங்க தடங்களுக்கு வருந்துறோம்னு சொல்வாங்க 

இறுதியாக எங்க டவுசர் காலத்து ஹீரோ சக்திமான் ஸ்கூல்ல பிரசன்ட் மிஸ்னு சொல்றமாதிரி கைய தூக்கிட்டு வந்து சாகசம் செஞ்சு வயித்துல பால வாய்ப்பார் ( அப்பல்லாம் பீர்னா என்னென்னே தெரியாது ) இப்படியாக ஒவ்வொரு ஞாயிறும் மகாபாரதத்தால சபிக்கப்பட்டு சக்திமானால ஆசிர்வதிக்கப்படும்..
 
இப்பல்லாம் என் குட்டிபொண்னோட பால்ய நாயகன் சோட்டாபீம் அவ வீட்லயே ரிமோட்ல 5ஆம் நம்பர் அழுத்தியதும்  38 இன்ச் சோனிடிவில உடனே வந்திடறான் வாழ்க அறிவியல்... ஆனா எனக்கு கிடச்ச மாதிரி விரும்புறத காத்திருந்து அனுபவிக்கிற சுவாரஸ்யம் அவளுக்கு கிடைக்குமான்னு தெரில அதேசமயம் காத்திருப்புன்னா என்னன்னும்...
 
இதுதான் மகா பாலிடாயில் கதை :)

Monday, May 19, 2014

இழவு வீடு




திரும்புதல் இல்லாத பயணம்
நேர்ந்த வீடு 
உரு தந்தவனை உள்ளறையில்
கிடத்தியிருக்கிறது
வெடித்த அழுகுரல்கள்
கணத்த கதைகள்
மரித்த உரையாடல்களினூடே
இறந்தவனை போல 
அகலாமாகியிருக்கிறது வீடு   
வழியனுப்பும் நிகழ்சிக்கடுத்து    
வார / மாத 
இறுதிக்குள் இயல்பிற்கு 
திரும்பக்கூடும்  
வந்திருந்த வருங்காலபயணிகள்  
போலவே வீடும் 

Friday, May 16, 2014

கடவுள்களின் பூமி




குட்டி குட்டி தேவதைகள்
ஊதியனுப்பும் சோப்புக் குமிழிகளின் ஒவ்வொரு பெருவெடிப்பிற்கு பிறகும் உருவாகிறது  
கடவுள்களுக்கான 
வளி மண்டலம்

பயணம் முடித்தவன் குறிப்பு



இந்த ஜீவநதியின் 
அசைவினூடேயான 
பயணத்தின் 
ஒரு சில கூடுகைகளிலும் 
ஒரு சில பிரிவுகளிலும் 
என்னைப்போலவே 
நீங்களும் சந்திக்க நேரலாம் 
கோரம் மறைத்த கடவுளையும்
கோரம் மறந்த சாத்தானையும் !!

காவி அரசியல்





உதிரம் ருசித்து பழகிய 
செந்நரி ஒன்று 
வாவ மூட்டில் மெதுவாக
உள் நுழைந்து 
வேட்டைக்கு காத்திருந்தது 
கவனித்த குழந்தை 
மெல்ல மெல்ல 
அருகில் சென்று 
தடவி பார்த்து 
தழுவி பார்த்து 
அந்நியம்
கலைந்து விளையாட 
தொடங்கியது 
இருவர் கண்களிலும் 
இன்னும் தட்டுப்படவில்லை
பிஞ்சு கழுத்தும் 
கோர பற்களும் !!