Monday, June 30, 2014

சூப்பர் ஸ்டார்

டிஸ்கி :

இந்த கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களின் காவாலித்தனங்கள் அனைத்தும் கற்பனையே மீறி உண்மைன்னு நீங்க சொன்னா அது உங்க தலைவிதியே !! மேலும் இந்த பதிவு லூசியா போல பிளாக்கில் கதை சொல்லல் முயற்சி அவ்வளவே

சூப்பர் ஸ்டார் : ( இதாங்க இந்த படத்தோட டைட்டில் )

படத்துல மொத்தம் மூனு கேரக்டர் தான் அவங்களுக்குள்ள நடக்கிற ஒரு விசயம் தான் இந்த படத்தோட ஓன் லைன்.. பத்தாது நிறைய லைன் வேனும்னு  நினைக்கிறவங்க மேற்கொண்டு படிங்க

ஒப்பன் பன்னினா ஒரு அழகான கிராமம் ஒபன் பன்னினா பாட்டில்ல சரக்குதான வருமுங்கிற உலக சினிமா ரசிகர்கள் மேற்கொண்டு வாசிப்பதை தவிர்த்தல் நலம்.. அந்த கிராமத்துல இருக்கிற எல்லாமே முட்டாபயலுவ  கிட்டதட்ட முண்டாசுபட்டி மக்கள் மாதிரி... இந்த மக்களுக்கு முப்பொழுதும் இருக்கிற ஒரே பொழுதுபோக்கு சைடுபோக்கு மெயின்போக்கு வித்தை பாக்கிறது இந்த மக்கள் காலம் காலமா வித்தை பாத்து வளந்தவங்க மட்டுமில்லாம வித்தை காட்டுற கூத்தாடிகளை கொண்டாடிகிட்டும் வரவங்க இந்த பழக்கம் இழுத்து பாட்டு பாடி காட்டின ஒரு வித்தைகாரன்கிட்ட இருந்து வந்தது அந்த பிளாஷ்பேக் வச்சா போரடிக்கும் so விட்றுவோம்

இப்படியா பட்ட கிராமத்துக்கு அசலூர்ல இருந்து  மாயாஜால வித்தை காட்டுறதுல ஸ்பெசலிஸ்ட் ஆன சூப்பர் வித்தைகாரர் ஒருத்தர் வந்தார் வந்து என்ன மாயம் மந்திரம் பன்னினார்னு தெரில ஊர் பயலுவ மொத்தமும் அவரு தலைய சொரிஞ்சா செம ஸ்டைலுபா தாடைய தடவுனா அதும் செம ஸ்டைலுபா பீடி குடிக்கிறது எல்லாத்தையும் விட ஸ்டைலுப்பான்னு இவருக்கு தூக்கி குடுத்த பட்டம் தான் சூப்பர் ஸ்டார்.. இந்த கேரக்டர்லதான் சார் பெரிய ட்விஸ்டு வைக்கிறேன் இந்த கேரக்டர் எப்படி பட்டதுன்னா இவர் ஒரு மாதிரி இவர்க்கு மறதி அதிகம்னும் சொல்ல முடியாது கம்மின்னும் சொல்ல முடியாது புத்திசாலின்னும் சொல்ல முடியாது மனப்பிறழ்வுன்னும் சொல்ல முடியாது வேனும்னா எதுவும் புரியாது இல்லன்னா சொல்ல தெரியாதுன்னும் வச்சுக்கலாம்.. இவர் காட்டுற வித்தை கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் இவர ஏன் எல்லார்க்கும் பிடிக்கும்னா ரொம்ப எளிமையானவர் அது எப்படின்னா இவர பாக்க ஊர்க்காரங்க எல்லாரும் காத்திருந்தாலும் இவர் பாக்க போறது ஏழெட்டு ஊர் தள்ளி கொல்லி மலைல இருக்கிற ஒரு ஷப்பாஜி சாமியத்தான் அதுவும் வெறும் வேஷ்டி சட்டையோடத்தான் போய் பாப்பார் அந்தளவுக்கு எளிமையானவர்.

இப்படி அந்த கொல்லி மலைல ஏறும்போது விழுந்த ஒவ்வொரு துளி வியர்வைக்கும் நம்ம முண்டாசுபட்டி கிராமத்தானுக  ஒரு வெள்ளிக்காசு குடுத்ததோட இல்லாம அவர் உடம்புக்கு எதுனா சின்ன பிரச்சின வந்தாலும் காவடி எடுத்து மொட்ட போடறென்னு வேண்டிக்கிற அளவுக்கு அவர செழிப்பா வச்சிருந்தாங்க அவரும் அந்த ஊர் மக்கள செழிப்பா வைக்கலன்னு அவரே சொன்னாலும் அந்த முட்டாபயலுவ நம்ம மாட்டானுங்க அதனால அத விடுங்க இப்படி ராஜபோகமா வாழ்ந்துகிட்டிருக்குற அந்த சூப்பர் வித்தைகாரருக்கு வயசாகிப்போச்சு...

அதே ஊர்ல இருக்கிற ஒரு குரங்கு வித்தைகாரனுக்கும் இன்னொரு குரளி வித்தைகாரனுக்கும் அந்த சூப்பர் வித்தைகாரர்கிட்ட இருக்கிற பட்டத்த எப்படியாவது அடையனும்னு ஆசை என்னத்த பன்னினாலும் பே.......ன்னு ரசிக்கிற ஊர்ல இவிங்களுக்கும் தனித்தனியா முட்டாபயலுவ ரசிக கூட்டம் இருக்கு.. இந்த குரங்கு வித்தைகாரன் கேரக்டர்ல என்ன ட்விஸ்டு வைக்கிறேன்னா இவன் பக்கத்துல ஒரு பெரிய பாம் வெடிச்சாலும் அமைதின்னு அவங்க அப்பாவையே வச்சு பத்திரிக்கைக்கு நீயுஸ் குடுக்கிறது டுட்டோரியல் காலெஜ்ல படிக்கிற பயலுவளுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கி தந்தாலும் அத மூனு பக்கத்துக்கு விளம்பரம் பன்னுரது எற்கனவே ஜெயிக்கிற மாதிரி இருக்கிற தலைவருக்கு  அந்த ஊர்  பிரசிடெண்ட் எலக்சன்ல இவன கூப்பிடாமலே போய் ஆதரவு தர்ரது அப்படி ஜெயிச்ச பிரசிடெண்ட்கிட்ட என்னால தான் நீங்க ஜெய்ச்சிங்கன்னு சொல்ல போய் அவங்க இவன அல்லையிலயே மிதிச்சு துரத்தி விடறதுன்னு பரபரன்னு ஏகப்பட்ட சீன் இந்த குரங்கு வித்தை கேரக்டருக்கு வச்சிருக்கேன்...

அடுத்து குரளி வித்தைகாரன் இந்த கேரக்டர்ல என்ன சுவாரஸ்யம்னா இந்த கேர்க்டர் கொஞ்சம் தனித்துவமானது இது சும்மா ஒரு பேருக்கு தான் வித்தைகாட்டும் ஆனா அந்த வித்தைல இவருக்கே இண்ட்ரஸ்ட் இருக்காது பெரும்பாலும் மொக்க வித்தைதான் காட்டுவாப்லன்னாலும் இவர் சிரிப்பு பத்து கோடிக்கு போகும்டா இவர் முடி முப்பதுகோடிடான்னு சின்னவர் படத்துல வலையில மாட்டுன செந்தில இழுத்துகிட்டே சந்தோசமா பேசுற கவுண்டமனிய போல உள்ள ரசிகர்களே இவர்க்கு பலம்...பொதுவா சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாங்கிற மாதிரி இந்த கேரக்டர் சேட்ஜி லுக்குல ஏகப்பட்ட கோட் சூட் கண்ணாடி  போட்டு வித்தை காட்டுறதாலயும் இந்த வித்தைக்காரருக்கு ரசிக கூட்டம் ஜாஸ்தி..... இத்தன கூட்டம் இவர் வித்தைக்காக காத்திருந்தாலும்  அவருக்கு இந்த பட்டம் விடுறது ஒத்த டயர பக்கத்து ஊருக்கும் இந்த ஊருக்கும் நடுவுல உருட்டிட்டு விளையாடுறது அத விதவிதமா போட்டோ எடுக்கிறது மாதிரியான விளையாட்டுலதான் அலாதி பிரியம்... அப்புறம் முக்கியமா இவர் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ரோட்டு பிளாட்பாரத்துல படுத்து இருக்கிற மக்களுக்கு  நடுவுல போய் படுத்து தூங்கி அவங்களுக்கு இவர் கையால பிரியாணி செஞ்சு தர அளவுக்கு எளிமையான ஒரு கேரக்டரா டெவலப் பன்றோம்... .

இப்படி காட்டுற வித்தைக்கும் பாக்கிற ஜனங்களுக்கும் எதாவது நல்லது  செய்ய நினைப்பேனாங்கிறாங்கிற  இந்த மூனு கேரக்டரையும் மையமா வச்சு அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்த மொத கேரக்டர் யாருக்காவது விட்டுக்கொடுக்குதா ??  இல்ல குரங்கு வித்தைகாரன் பல்டியடிச்சு கஷ்டபட்டு அத வாங்கிடரானா?? இல்ல அத வாக்கிங் போயே குரளி வித்தைகாரன் வாங்கிறானா ?? எப்படி அந்த பட்டம் யார் கைக்கு கிடைக்குதுன்னு ஆடியன்ஸ கன்னா பின்னா வென யோசிக்க வச்சு முடிக்கிறோம் கிளைமேக்ஸ..

ரோலிங் எண்ட் கார்ட் :

நன்பர்களே லூசியா மாதிரி செம போதையேத்துற இந்த கதை படமாக்கப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்களால முடிஞ்ச பணத்த என் அக்கவுண்ட்ல போடுங்க இல்ல மொக்க படம்னு நினைச்சா உங்க பணத்த எந்த குப்பையில வேணாலும் போடுங்க... மறக்காம கமெண்ட்ட மட்டும் கமெண்ட் பாக்ஸ்ல போடுங்க...

பினிஷிங் எண்ட் கார்ட் :

இந்த கற்பனை கதைய உண்மை கதைன்னு  நம்பி அத எப்படிறா நீ சொல்லாம்னு என்ன கெட்ட வர்தையில திட்டி கமெண்ட் போட விரும்புற  ரசிக கண்மணிகள் உங்க  வீட்ல ஒரே ஒரு டம்ளர் அரிசி உங்கள் தலைவன் கையால் வாங்கி பொங்கி சாப்பிட்டிருந்தா மட்டும் திட்டவும் ஆமென் ._/\_ 



Wednesday, June 25, 2014

கொள்ளைக்காரர்களுக்கு நடுவில் ஒரு தேவன்


உங்க குழந்தைய எந்த ஸ்கூல்ல சேத்திருக்கிங்க ??

அனேக பெற்றோரிடமிருந்து வருகிற பதில் இதுவாகத்தான் இருக்கும்…

நான் என் பையன / பொண்ண கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டில, ப்ரோக்ளின் யுனிவர்சிட்டில தான் சேத்தியிருக்கேன் ரீதீயில் ஒரு பள்ளி பெயரும் கூடவே பீஸ் நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் அறுபதாயிரம்னு பதில் நீண்டு அவர்களின் கண்களில் க்ளீங்கென்று ஒரு சத்தத்துடன் லைட் எரியும்… இத்தகைய பெரிய பள்ளிகளில் படித்தால் மகனும் மகளும் பெரிய ஆள் ஆகிடுவார்கள் என பெற்றோர்களுக்கு மூடநம்பிக்கை பேராசை இத்தியாதி இத்தியாதி என அடிப்படை காரணங்கள் நிறைய உண்டு இப்படிபட்ட பெற்றோர்கள்தான் கொள்ளை கூட்டங்களின் வளர்ச்சிக்கு முதல் வித்து…

எங்கள் நிறுவனத்தின் தரத்தை பாரீரென ஊர் முச்சந்தியில் அவர்களின் பம்புசெட்டுகளை போட்டோ எடுத்து பிளெக்ஸ் போட்டு நிக்க வைக்கிற அதே பம்புசெட் மேனுபேக்சரிங் கம்பெனிகளின் எத்திக்ஸோடுதான் சில தனியார் பள்ளிகளும் இப்பபோது இயங்கிக்கொண்டிருக்கிறது உற்பத்தி செய்ய வேண்டிய பொருள்களுக்கு எவ்வளவு ரா மெட்டிரியல் தேவைப்படும் என்னென்ன இன்ஸ்ட்ருமெண்ட் கருவிகளின் பயன் தேவைப்படும் என எல்லா தேவை கணக்கு பட்டியல்களையும் இன்வெஸ்டர்களிடம் ஓப்படைத்து கச்சிதமாக கலெக்சனும் செய்து குறிப்பிட்ட டெலிவரி நாட்களுக்குள்ள மெஷினை தயாரித்தனுப்பி அதை செம்மையாக விளம்பரபடுத்தி அடுத்த இன்வெஸ்ட்டர்களை ஈர்ப்பதுதான இந்த மாதிரியான தனியார் பள்ளிகளின் அதிமேதாவிதன யுக்திகள்… இதுபோக டொனெசன் மெடிடேசன் யோகா ராகா சாகாவென்று மொத்தமாக பூ சுத்தி ஒவ்வொரு பம்புசெட்டுக்கும் உபரி செலவு கணக்குகள் காமித்து எல்லா சந்து பொந்துகளிலும் கொள்ளையடிக்கும் சூட்சுமம் தெரிந்த கம்பெனிகள் இவை உள் நுழைபவை யாவும் கூட்ஸுகளாக அனுக மட்டுமே தெரிந்த இந்த கொள்ளைக்கார மேனுபேக்சரிங் கம்பேனிகளுக்கு குறைந்த பட்ச மனிதம் என்பது எந்தளவு இருக்க கூடும் ? 

தேவன் அனுப்பிய தேவதைகள் ;-

சென்ற பாரா மாதிரியான ஒரு பம்பு செட்டை தயார் செய்கிற பள்ளிக்கு மகளை அனுப்ப கூடாதென்று ஒரு தெளிவான எண்ணத்தின் அடிப்படையிலும் அரசு பள்ளியில்  எனக்கு கிடைத்த அனுபவத்தை விட ஒரு பத்து படி அதிகமும் மிக முக்கியமாக எந்த தினிப்பும் அவசரமும் இல்லாமல் அவளின் குழந்தைபருவம் அவளுக்கு அப்படியே கிடைக்க வேண்டுமெனவும் அதற்கு கூடவோ குறையவோ இல்லாமல் அளிப்பது மட்டுமே என்பங்கு என்பதை உணர்ந்திருந்தேன்…..என்னைவிட குறைந்த சம்பளம் வாங்குகிற என் நண்பர்களெல்லாம் அவர்களின் குழந்தைகளை சிபிஎஸ்சி, ரிப்ஸ் போன்ற பெரிய பள்ளிகளில் சேர்த்து 40000, பீஸ் கட்டியதாக பெருமையாக என்னிடம் சொல்லிப்போனார்கள்…. அதைபற்றி எந்த கவலையுமின்றி மகளை வீட்டுக்கு அருகிலேயே உள்ள கிறிஸ்டியன் டிரஸ்டின் கீழ் நடக்கிற ஒரு சின்ன மெட்ரிகுலேசன் பள்ளியில்தான் சேர்த்தேன் அங்கு வருடத்திற்கு மூவாயிரத்துக்கும் குறைவாகத்தான் பீஸ் இருந்தது….மேலும் கார்ப்ரேசனில் வேலை செய்பவர் முதல் காவல் அதிகாரி வரையிலான பலதரபட்டவர்களின் குழந்தைகளும் படிக்கிற பள்ளி அது.. எந்த ஒரு அவசரமும் இல்லாத  நிதானமாக அணுகுற ஒரு வாழ்கையத்தான் அந்த பள்ளியும் மகளுக்கு தந்தது… குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்க்கிற பள்ளியில் சேர்த்த மகிழ்வோடு ஒரு வருடம் கடந்திருந்தது...

சென்றவாரத்தில் ஒரு நாள் எப்போதும் போல மகளை அழைத்துவர சென்றிருந்தபோது மகளின் மிஸ் என்னிடம் சார் நாளைக்கு சஷ்டிகா வீட்டுக்கு நாங்க வருவோம் என சொல்ல நானும் கண்டிப்பாக   வாங்க மிஸ் என சொல்லிவிட்டு வந்தேன் அடுத்த நாள் ஆச்சரியமாக மகளின் ஸ்கூலிலிருந்து ஐந்து டீச்சர்கள் வந்திருந்தார்கள் என்னைப்பற்றி என் வேலை பற்றியெல்லாம் விசாரித்து குறிப்பெடுத்தார்கள் எதற்காகவென குழம்பி பிறகு கேட்டேன்..


எதுக்காக மிஸ் ஸ்டூடண்ட் வீட்டுக்கெல்லாம் விசிட் பன்றிங்க??

ஒன்னுமில்ல சார் இது எங்க ஸ்கூல் ஒரு அசைன்மெண்ட்,,

என்ன அசைன்மெண்ட் மிஸ் ???  

எங்க ஸ்டுடண்ட் ஒருத்தரோட பாதர் சில மாசத்துக்கு முன்ன இறந்து போய்ட்டார் அந்த பையனின் அம்மாவும் வேற யார்கூடவோ ஓடிபோக பாவம் அந்த பையன் அவங்க தாத்தா கிட்ட இருந்துதான் ஸ்கூலுக்கு வந்துகிட்டிருந்தான் ஒரு நாள் அந்த தாத்தா ஸ்கூலுக்கு வந்து எங்க பிரின்ஸி சிஸ்டர்கிட்ட இந்த கதையெல்லாம் சொல்லி ஒரு ஏடிஎம் செண்டரில் மாசம் மூவாயிரம் சம்பளம் தான் மேடம் வாங்கறேன் பையன படிக்க வைக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருக்கார் பிர்ன்ஸி மேடம் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு அந்த பையன் படிப்பு செலவுக்கு டிரஸ்ட்ல சொல்லி ஏற்பாடு செஞ்சாங்க அப்புறம் ஒரு நாள் டீச்சர்ஸ்கெல்லாம் மீட்டிங் வச்சு இந்த கதைய சொல்லி அடுத்து இந்த மூனு மாசத்துல சனிக்கிழமைகள்ள எல்லா ஸ்டுடண்ட்ஸ் வீட்டுக்கும் போய் சர்வே எடுக்க சொல்லியிருக்காங்க சார் அந்த பையன் மாதிரி கஷ்டபடுற குழந்தைகளுக்கு அவங்க பீஸ்லயும் மத்த உதவி எதாவது தேவைபட்டாலும் செஞ்சு தர டிரஸ்ட்கிட்ட பேசியிருக்கோம் அதான் சார் எல்லா ஸ்டூடண்ட்ஸ் வீட்டுக்கும் விசிட் பன்றோம் அப்ப நாங்க போய்ட்டு வறோம் சார் சஷ்டிகா பை பையென சொல்லிவிட்டு சாதரணமாக வெளியேறினார்கள் 

அவர்கள் புள்ளியாக மறையும் வரையில் தேவன் அனுப்பிவைத்து வீடு வந்து சென்ற சில றெக்கையுள்ள தேவதைகளை நேரில் பார்த்த பிரமிப்பு என்னுள் நிகழ்ந்திருந்தது …

மகள் செகண்ட் ரேங்க் எடுத்து வந்து காட்டிய போது கூட இவ்வளவு நெகிழ்வாக இருக்கவில்லை  இதோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய இந்த வினாடிகளுக்கு பிறகிருந்து என்னுடைய குழந்தைக்கு படிப்பை மட்டும் இல்லாமல் மனிதத்தையும் கற்றுக்குடுக்கும் ஒரு பள்ளியில் சேர்த்திருக்கிறேன் என இந்த நொடி வரைக்கும் அந்த நெகிழ்வு நீண்டு கிடக்கிறது

மேற் சொன்னவைகளை அந்த நண்பனிடம் சொன்னபோது பரவாலடா எவ்வளவு நல்ல ஸ்கூலென சொல்லிவிட்டு நாப்பதாயிரம் ரூவா புடுங்கினதோட சரி அந்த புடுங்கிக……………………………அவன் மகன் படிக்கும்  சிபிஎஸ்சி பள்ளியை அதி அற்புதமான சில கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஒரு பேரண்ட்ஸ் மீட்டிங் கூட வைக்கிறதில்ல என்று தரையை வெறித்து சொல்லிக்கொண்டிருந்தான் . 

Monday, June 23, 2014

தேவதையும் புரட்சியும்

 
 


பாதையின் குறுக்காக 
தலைவைத்து படுத்து
புரட்சிசெய்ய எந்த 
ஒரு சித்தாந்தமுமின்றி 
ஊர்ந்து ஊர்போகும் 
ரயில் பூச்சியை ரசித்து
பார்த்திருக்கிறாள் மகள் 
அவளுடனே நானும் !! 

Wednesday, June 4, 2014

தீரா குறிப்பு



தீரா வாழ்வு தீரா புன்னகை
தீரா அன்பு 
தீரா காதல்
தீரா ஸ்பரிசம் 
தீரா முத்தம் 
தீரா புணர்வு 
தீரா மகிழ்ச்சி 
எல்லாம்
தீர்ந்திருந்தபோது 
கனவும் தீர்ந்திருந்தது !!

சாயல்