Tuesday, December 24, 2013

தவறவிட்டவை பற்றி ஓர் குறிப்பு




தொலைந்து
போன பால்யத்தில்
ஒரு எருக்கம்பூ மூக்குத்தி,
ஒரு ஜோடி
வேர்கடலை தோடும்
வெண்டைக்காய் கம்மலும் அடக்கம் ...


Friday, December 20, 2013

தலைமுறைகள் (2013)



பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் நிறத்தை,ஒளியை,சிந்தனையை
தரத்தை மேம்படுத்தியவர்களில் முக்கியமானவர்; இன்றைய தமிழ்
சினிமாவின் பல தரமான இயக்குனர்களை உருவாக்கியவர்
இவரின் வீடு, சந்தியாராகம் போன்ற திரை படங்கள் தமிழின்
முக்கியமான காவியங்களில் ஒன்று... நல்ல
சினிமாவை நேசிப்பவர்களில் நிசசயம் பாலுமகேந்திராவையும்
நேசிப்பார்கள்;
நெடுநாட்களுக்கு பிறகு வந்துள்ள பாலுமகேந்திராவின் "தலைமுறைகள்"
பற்றி ஒரு பதிவு ,,

ஆரண்யா காண்டத்தில் சிங்கபெருமாளிடம் பசுபதி கேட்கும் கேள்வி என்ன நீங்க டொக்காயிட்டிங்களா ??
அதே போல சில ஆளுமைகளிடம் காலம் நம்மை கேள்வி கேட்க வைத்துவிடுகிறது அல்லது அவர்களாக கேட்க வைககிறார்கள் ..

சந்தியாராகத்துக்கும் தலைமுறைகளுக்கும் பெரிய
வித்யாசம் எதுமில்லை முன்னதில் அப்பாவுக்கும் மகனுக்கும்
இடையேயான முரன்கள்; பின்னது தாத்தாவுக்கும் பேரனுக்கும்
இடையேயானது ..
தமிழ் பேசவே தெரியாத, சக தோழமைகள் கிடைக்காத பேரனுக்கு
தமிழையும் கொஞ்சம் வாழ்கையையும் கற்று தருகிறார் கடைசி
காலத்தை கழிக்கும் தாத்தா பதிலுக்கு
ஜாதிகள்,மதங்கள் ஊறிப்போன ஒரு தாத்தாவுக்கு உறவுகளின்
மேன்மையையும் கொஞ்சம் ஆங்கிலத்தையும் கற்று தருகிறான்பேரன்
இவர்களுக்குள்ளான வாழ்கையை தோய்வாகவே படைத்திருக்கிறார்
பாலுமகேந்திரா ..

எப்போதுமே அவரது படைப்புகள் சமரச புத்தி (மிடில் கிளாஸ்)
பார்வையிலே நகரும் இந்த படமும் விதிவிலக்கல்ல..

THE WAY HOME என்றொரு கொரிய திரைப்படம் பாட்டிக்கும்
பேரனுக்குமான உறவை அழகியலோடு படைத்திருக்கும்
இதில் அந்த படத்தின் தாக்கம்தான் அதிகம் வெளிப்படுகிறது ..
எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா இசை பாலுமகேந்திராவின்
படைப்பை இன்னும் உயர்த்தும்.. இதில் யூ டூ ராசா? தான்
ஒரு இலங்கை தமிழனாக பாலு சொல்லவேண்டியது எவ்வளவோ
இருக்க எப்போதும் போல அவரது சமரச புத்தி இதுபோல
படைப்புகளை தான் தருகிறது ..
படைப்பு என்பது படைப்பாளியின் உரிமை என்பதால் கடந்து போவதை தவிர எதுவும் சொல்வதற்கில்லை..

ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஒளிப்பதிவில் எப்போதும் தான் இளைஞன் என்பதை அழுத்தமாகவே நிரூபிக்கிறார்
பாலுமகேந்திரா .. அவரின் ஆஸ்தான நாயகன் சொக்கலிங்க பாகவதர் இல்லாத குறையை நீக்க அவரே நடித்தும் இருக்கிறார் ..என்ன ஒரு நடிப்பு தமிழ் சினிமா ஒரு திறைமையான ஒரு நடிகனை இவ்வளவு காலம்
இழந்து விட்டது என்பது மறுக்கமுடியாத நிஜம் ..

வெல்கம் ஆக்டர் பாலுமகேந்திரா ஸார் ..