Wednesday, February 4, 2015

பொருளீட்டல்


ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ஒருவகை எலும்பு நோய், இந்நோய் எலும்புகளின் ஸ்திரத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வலிமையற்றதாக மாற்றிவிடக்கூடியது.  பெரும்பாலும் இந்நோய் பெண்களையும், முதியவர்களையுமே அதிகமாக தாக்குகிறது. அதனாலே வயதானவர்கள் சிறிதாக கீழே விழுந்தால் கூட எலும்பு முறிந்து விடுகிறது. இந்த நோய்க்கு பலதரப்பட்ட மருந்துகள் இருப்பினும் பாராதைராட் ஹார்மோன் (டெரிபேராடைட்) இஞ்செக்‌ஷன் என்பது ஒரு புதுவகையான கண்டுபிடிப்பு. 6 முதல் 18 மாதம் வரை எடுத்துக்கொள்ள வேண்டியது. விலையும் மேல்தட்டுவர்கம் மட்டும் பயன்படுத்தக்கூடிய அளவு. இதை டாக்டர்களிடம் ப்ரோமோட் செய்வதே என் பணி.

வழமையான ப்ரோமோட்டலினூடே ஒரு மருத்துவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

இப்பல்லாம் இத்தன விலை குடுத்து வாங்கி  யாருப்பா வயசானவங்கள care செஞ்சு பாத்துக்கிறானுக?

ஏன் சார் அப்படி சொல்றீங்க?

மனுசங்க இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாங்கப்பா? இப்பல்லாம் வயசானவங்கள ஹோம்லதான் வச்சிக்கிறானுக, நான் அப்படி சில ஹோம்களுக்கு விசிட் செய்வேன், போனவாரம் ஹோம்ல இருந்த ஒரு அம்மா இறந்துட்டாங்க, அவங்களுக்கு ஹஸ்பண்ட் இல்ல, ஒரு பொண்ணு ரெண்டு பசங்க, எல்லாருமே அப்ராட்ல செட்டில்ட். மூனுபேரோட Income சேத்தா மாசம் பத்து கோடி வரும். அவங்களுக்கு தகவல் தந்தப்போ அவனுக அந்த ஹோம் செக்ரட்டரிகிட்ட டைட் செட்யூல் வரமுடில, நீங்களே எல்லா காரியத்தையும் பாத்துக்குங்க, நாங்க வெப் கேமிரா வழியா பாத்துக்கிறோம்னு சொல்லிட்டாங்க, ஹோம்ல இறுதி சடங்கு செஞ்சாங்க அவங்களும் வெப்காமிரா மூலம் மட்டும் கலந்துகிட்டாங்க, சடங்கு முடிஞ்சு அந்தம்மா அஸ்திய மூணு பாகமாக பிரிச்சு கூரியர்ல அனுப்பி வச்சாங்க..

ச்சே என்ன மாதிரியான மனுஷங்க சார் அவங்க?

இது கூட பரவாலப்பா, ஒரு வாரம் கழிச்சு அந்தம்மாவோட மூத்த மகன்  அம்மா அஸ்திய தேம்ஸ் நதில கரைச்சிட்டோம், ரொம்ப நன்றி,  எங்க  அம்மாவோட இறுதிச்சடங்க நாங்க கூட இவ்வளவு சிறப்பா செஞ்சிருக்க மாட்டோம், நீங்க அவ்வளவு சிறப்பா செஞ்சீங்க சார், மிக்க நன்றின்னு அந்த ஹோம் செக்ரட்டரிக்கு அப்ரிசியேட் மெயில் அனுப்பிருக்கான் யா...

இப்படியாப்பட்ட மனுசங்க வாழுற உலகத்து மத்தில எத சொல்லி நான் இந்த மருந்த கன்வின்ஸ் செய்ய?

"கொடும சார், என்ன சொல்றதுன்னு தெரில, இருவருக்குமிடையே சிறிது நேரம் நீண்ட மெளனத்திற்குப்பின் "எனிவே சூட்டபிள் பேஷண்ட்ஸ்க்கு ரெகமண்ட் செய்ங்க சார்" என சொல்லிவிட்டு வெளியேறினேன்.

மேனஜரிடமிருந்து கால் வந்தது
"அந்த டாக்டர டெரிபேராடைட்க்கு கன்வேர்ட் செஞ்சிட்டியாய்யா?

"செய்ய முடியல சார்"

"அட என்னய்யா சேல்ஸ் ரெப் நீ ?  இத கூட செய்ய முடியலையா ?"

"-------"