Wednesday, May 21, 2014

இதுதான் மகாபாரத கதை


உங்கள் விஜயில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மிக பிரம்மாண்டமான மகாபாரதம் விளம்பரம் பாத்து வந்த கொசுவத்தியின் நீட்சிதான் இந்த பதிவு 

இந்த பெரிய இதிகாசம் பின்னால் ஒரு காத்திருப்பு இருந்தது உஸ்ஸ்ஸ் மூச்சு விட்டுக்கோங்க அதே டவுசர் காலத்துல தான்...இப்பல்லாம் வீட்டுக்கு 2 டிவி 2 சிஸ்டம்னு இருக்கு முன்ன பத்து தெருவுக்கு 5டிவின்னு இருந்த காலகட்டம் (கலாநிதி மாறன் பில்கேட்ஸ்லாம் காலேஜ் போய்கிட்டிருந்திருப்பாங்க போல) அப்படி 5டிவிலையும் பன்னிக மாதிரி கூட்டமா வராம சிங்கம் மாதிரி சிங்கிளா வந்த ஒரே சேனல் தூர்தர்ஷன் மட்டும்தான் இதுல செய்திகள்,ஊமைசெய்திகள்,எதிரொலி,வயலும் வாழ்வும்,ஒலியும் ஒளியும்,இந்தி படம், தமிழ்ப்படம்னு ஒருநாளைக்கு ஒன்னா சோசியல்,பசுமை,இசை,சினிமான்னு இந்த சிங்கம் சிங்கிளா புரட்சி செஞ்சது.. 

அப்போதான் என்ன மாதிரி குட்டிபசங்களுக்கு புரட்சி பன்ண ஒவ்வொரு ஞாயிறும் சக்திமான் வந்தார் இவர்தான் எங்களுக்குன்னு அப்ப இருந்த ஒரே சோட்டா பீம் (ஆனா பாக்க தடிமாடு மாதிரி இருப்பார்) இதுல பிரச்சின என்னன்னா இவர் அந்த பாழா போன மகாபாரதம் முடிஞ்சு அப்பாலிக்காதான் வருவார்.. 

எங்க தெருவுக்குன்னு கடவுளால் விதிக்கப்பட்ட டிவி ஏரியாவுல ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வூட்ல இருந்தது பிரண்ட் வீடுங்றதுனால ரெண்டு கதவு வச்சு மூடு அந்த டிவிக்கு 10 அடி முன்னாடி வரைக்கும் உக்கார்ந்து பாக்குற உரிமை எனக்கு இருந்தது என் பிரண்ட் வீடு என் உரிமை..அதும் மகாபாரதம் தொடங்குறதுக்கு முன்னமே போனாத்தான் அந்த இடம் கிடைக்கும் இல்லன்னா ஒட்டகசிவிங்கி மாதிரி சர்க்கஸ் பன்னித்தான் பாக்கணும் அப்படி அடிச்சு பிடிச்சு என் இடத்தை உறுதி செஞ்சு மகாபாரதத்த சகிச்சிக்கலாம்னு உக்காந்தா அது முதல்ல 
"நான்தான் காலம்னு தொடங்கி சம்பவாமி யுகே யுகேஏஏஏஏன்னு லெந்தா ஒரு டயலாக் முடிஞ்சு ஹேராம் படத்துல வர இசையில் தொடங்குதம்மா பீட்ல டைட்டில் சாங் ஓடி இதுதான் மகாபாரத கதைன்னு முடியும் அந்த 
டைட்டில்சாங் அதாவது ராஜ் டிவில படத்துக்கு நடுவுல விளம்பரம் போடுவாங்களே அவ்ளோ நீளம்.. 

அப்பாடான்னு புட்டத்த அழுத்தி உக்காந்தா எவனெவனோ இந்தி ஆர்டிஸ்ட்டுக செந்தமிழ்ல பேசி சாவடிப்பானுக அதுல பாருங்க இந்த சகுனின்றவன் மதன்பாப் உடம்புல நம்பியார் ஆவி புகுந்தாப்ல அருமை மருமகனேன்னு அடிக்கடி சிரிச்சு வெறுப்பேத்துவாப்ல 'பே'ன்னு விட்டத்த வெறிச்சு காத்திருந்தா ஒருவழியா மகாபாரதம் முடியும் இனி நம்மாளு வந்திடுவார்னு சுறுசுறுப்பா நிமிந்து உக்காந்தா கொய்ய்ய்ய்ய்ன்னு நாட்டாமை சரத்குமார் கவுண்டமணி காதுல அரையிற சத்தமும் ஒரு அம்புக்குறியும் டிவி ஸ்கிரீன்ல வந்து பொறுமைய சோதிக்கும் ஆனா தூர்தர்ஷன்காரங்க நல்லவங்க தடங்களுக்கு வருந்துறோம்னு சொல்வாங்க 

இறுதியாக எங்க டவுசர் காலத்து ஹீரோ சக்திமான் ஸ்கூல்ல பிரசன்ட் மிஸ்னு சொல்றமாதிரி கைய தூக்கிட்டு வந்து சாகசம் செஞ்சு வயித்துல பால வாய்ப்பார் ( அப்பல்லாம் பீர்னா என்னென்னே தெரியாது ) இப்படியாக ஒவ்வொரு ஞாயிறும் மகாபாரதத்தால சபிக்கப்பட்டு சக்திமானால ஆசிர்வதிக்கப்படும்..
 
இப்பல்லாம் என் குட்டிபொண்னோட பால்ய நாயகன் சோட்டாபீம் அவ வீட்லயே ரிமோட்ல 5ஆம் நம்பர் அழுத்தியதும்  38 இன்ச் சோனிடிவில உடனே வந்திடறான் வாழ்க அறிவியல்... ஆனா எனக்கு கிடச்ச மாதிரி விரும்புறத காத்திருந்து அனுபவிக்கிற சுவாரஸ்யம் அவளுக்கு கிடைக்குமான்னு தெரில அதேசமயம் காத்திருப்புன்னா என்னன்னும்...
 
இதுதான் மகா பாலிடாயில் கதை :)

15 comments:

  1. அருமை :-))) நல்ல நகைச்சுவை பதிவு!

    amas32

    ReplyDelete
  2. amas ரொம்ப நன்றிம்மா,,,,என் பிளாக்ல முதல் தடவையா கமெண்ட் போட்டது நீங்கதான்
    அம்மா வார்த்தைக்கு முழுஅர்த்தம் நீங்க :)))

    ReplyDelete
  3. சென்னை பாஷை தூக்கலா இருக்கு ;-))

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மாம்ஸ் :))

      Delete
  4. Super!!! Please write more things. Dont stop it. Best wishes... by SunMuga

    ReplyDelete
  5. Waiting for the next post.. :)

    ReplyDelete
  6. very nice. antha kala gnabaganalai thoondivittathukku.

    ReplyDelete
  7. செம... உண்மையிலே இப்போ இருக்குறவங்களுக்கு சக்திமான், ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரகாந்தா, இப்படி எதுவும் தெரிய வாய்ப்பே இல்ல ...

    ReplyDelete