Tuesday, December 24, 2013

தவறவிட்டவை பற்றி ஓர் குறிப்பு




தொலைந்து
போன பால்யத்தில்
ஒரு எருக்கம்பூ மூக்குத்தி,
ஒரு ஜோடி
வேர்கடலை தோடும்
வெண்டைக்காய் கம்மலும் அடக்கம் ...


Friday, December 20, 2013

தலைமுறைகள் (2013)



பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் நிறத்தை,ஒளியை,சிந்தனையை
தரத்தை மேம்படுத்தியவர்களில் முக்கியமானவர்; இன்றைய தமிழ்
சினிமாவின் பல தரமான இயக்குனர்களை உருவாக்கியவர்
இவரின் வீடு, சந்தியாராகம் போன்ற திரை படங்கள் தமிழின்
முக்கியமான காவியங்களில் ஒன்று... நல்ல
சினிமாவை நேசிப்பவர்களில் நிசசயம் பாலுமகேந்திராவையும்
நேசிப்பார்கள்;
நெடுநாட்களுக்கு பிறகு வந்துள்ள பாலுமகேந்திராவின் "தலைமுறைகள்"
பற்றி ஒரு பதிவு ,,

ஆரண்யா காண்டத்தில் சிங்கபெருமாளிடம் பசுபதி கேட்கும் கேள்வி என்ன நீங்க டொக்காயிட்டிங்களா ??
அதே போல சில ஆளுமைகளிடம் காலம் நம்மை கேள்வி கேட்க வைத்துவிடுகிறது அல்லது அவர்களாக கேட்க வைககிறார்கள் ..

சந்தியாராகத்துக்கும் தலைமுறைகளுக்கும் பெரிய
வித்யாசம் எதுமில்லை முன்னதில் அப்பாவுக்கும் மகனுக்கும்
இடையேயான முரன்கள்; பின்னது தாத்தாவுக்கும் பேரனுக்கும்
இடையேயானது ..
தமிழ் பேசவே தெரியாத, சக தோழமைகள் கிடைக்காத பேரனுக்கு
தமிழையும் கொஞ்சம் வாழ்கையையும் கற்று தருகிறார் கடைசி
காலத்தை கழிக்கும் தாத்தா பதிலுக்கு
ஜாதிகள்,மதங்கள் ஊறிப்போன ஒரு தாத்தாவுக்கு உறவுகளின்
மேன்மையையும் கொஞ்சம் ஆங்கிலத்தையும் கற்று தருகிறான்பேரன்
இவர்களுக்குள்ளான வாழ்கையை தோய்வாகவே படைத்திருக்கிறார்
பாலுமகேந்திரா ..

எப்போதுமே அவரது படைப்புகள் சமரச புத்தி (மிடில் கிளாஸ்)
பார்வையிலே நகரும் இந்த படமும் விதிவிலக்கல்ல..

THE WAY HOME என்றொரு கொரிய திரைப்படம் பாட்டிக்கும்
பேரனுக்குமான உறவை அழகியலோடு படைத்திருக்கும்
இதில் அந்த படத்தின் தாக்கம்தான் அதிகம் வெளிப்படுகிறது ..
எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா இசை பாலுமகேந்திராவின்
படைப்பை இன்னும் உயர்த்தும்.. இதில் யூ டூ ராசா? தான்
ஒரு இலங்கை தமிழனாக பாலு சொல்லவேண்டியது எவ்வளவோ
இருக்க எப்போதும் போல அவரது சமரச புத்தி இதுபோல
படைப்புகளை தான் தருகிறது ..
படைப்பு என்பது படைப்பாளியின் உரிமை என்பதால் கடந்து போவதை தவிர எதுவும் சொல்வதற்கில்லை..

ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஒளிப்பதிவில் எப்போதும் தான் இளைஞன் என்பதை அழுத்தமாகவே நிரூபிக்கிறார்
பாலுமகேந்திரா .. அவரின் ஆஸ்தான நாயகன் சொக்கலிங்க பாகவதர் இல்லாத குறையை நீக்க அவரே நடித்தும் இருக்கிறார் ..என்ன ஒரு நடிப்பு தமிழ் சினிமா ஒரு திறைமையான ஒரு நடிகனை இவ்வளவு காலம்
இழந்து விட்டது என்பது மறுக்கமுடியாத நிஜம் ..

வெல்கம் ஆக்டர் பாலுமகேந்திரா ஸார் ..









Monday, November 4, 2013

5 சுந்தரிகள் (மலையாளம் 2013) - விமர்சனம்






ஐந்து பெண்கள்,ஐந்து சிறுகதைகள்,ஐந்து இயக்குனர்கள்  வேறுபட்ட தளங்களில் வசிக்கும் ஐந்து பெண்களின் கதைகளே இந்த ஐந்து சுந்தரிகள்  மிக நேர்த்தியான ஐந்து குறும்படங்களின் கோர்வை கொண்ட அற்புத திரைப்படம் 

முதல் கதை :


பள்ளிச்சிறுமி சேதுலக்ஷ்மியினுடையது, லக்ஷ்மி 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி இவள் எப்போதும் புகைப்படங்களின் மீது நேசம் கொண்டவளாக இருக்கிறாள் செய்தித்தாள்களில் வரும் புகைப்படங்களை நோட்டு புத்தகங்களில் ஒட்டி மகிழ்கிறாள் ஒருநாள் வகுப்பு தோழனிடம் இதை பற்றிய பேச்சின் போது இருவருக்கும் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை வருகிறது... உண்டியலில் சேர்த்து வைத்த காசை எடுத்துக்கொண்டு அந்த ஊரில் இருக்கும்ஸ்டுடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறாள்கள் அந்த போட்டோகிராபர் இந்த சிறுமியின் மேல் பாலியல் இச்சை கொண்டவனாகிறான் அந்த சிறுமியை தனியாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அடுத்தநாள் அவள் பள்ளி செல்லும் வழியில் மரித்து மிரட்டி கூட்டி செல்கிறான் பெரும் சோகத்துடன் ஒன்றும் செய்ய முடியாத தன் நண்பனை திரும்பி பார்த்தவாறு செல்கிறாள் - இங்கே முடிகிறது முதல்கதை ஆண் என்ற கொம்பு முளைத்த மிருக இனத்தில் பிறந்ததற்காக வெட்கப்பட செய்த கதையிது !!
இரண்டாம் கதை ;


திருட்டை தொழிலாக கொண்ட பெண்ணின் கதை திருடப்போன இடத்தில் நீவின்பாலி அந்த வீட்டின் பெண் ஒருத்தியை கட்டிப்போடுகிறார் பின் அந்த பெண்ணிடம் அந்த ஒரே இரவில் காதல் கொள்கிறார் பின் அந்தபெண்ணும் திருட வந்தவள் என தெரிந்து கொள்ளும் சாதாரணாமான கதை தான் இது மீதி அனைத்தும் முக்கியமான கதைகள் 

மூன்றாம் கதை ; 










கணவன் மேல் நேசம் கொண்டவள் கதை -காவ்யா மாதவனின் மிகச்சிறந்த நடிப்பை   கொண்ட திரில்லர் கதை =கணவன் விபத்து ஒன்றில் இறந்து போன செய்தியை நம்பாமல் இரவு முழுதும் அவன் வருகையை எதிர்பார்த்து நொடிகளை நகரமாய் கழிக்கிறாள் பின் விபத்து செய்தியை உறுதி செய்துகொண்டு தற்கொலை செய்து கொள்ளும் கதையை செம 
த்ரில்லராக தந்திருக்கிறார்கள் ( மலையாள கஞ்சுரிங் ;-)) )

நான்காம் கதை :

இந்த படத்தின் மிக முக்கியமான கதை இது "குள்ளனும் அவன் மனைவியும்

துல்கர் சல்மான் ஒரு காலனி ஒன்றில் மாடிவீட்டில் வசிக்கிறார் வீல்சேர் வாசம் என்பதால் காலனி மக்களின் தினசரி நடவடிக்கைகளை கவனித்தபடி இருப்பதே இவருக்கு பொழுதுபோக்கு இப்படியிருக்க எதிர் வீட்டில் அழகான உயரம் கொண்ட கர்பிணி பெண்ணும் அவளைவிட உயிரம்குறைந்த கணவனும் குடி வர காலனி முழுதும் இவர்களின் ஜோடிப்பொருத்தம் பற்றிய பேச்சுகளை கவனித்து கொண்டிருக்கிறார் துல்கர்.. 


அந்த உயரப் பெண், அவள் கணவனோடு சந்தோஷமாக இல்லை என குடியிருப்பு ஆண்கள் அவர்களாகவே முடிவு செய்கிறார்கள்.. இவர்களாக கண்டறிந்த(!) அந்தப் பெண்ணின் தாம்பத்திய போதாமையை நிறைவுசெய்ய துடிக்கிறார்கள்… அந்த உயரப் பெண் கருவுற்றிருப்பதாக அறிந்ததும், அந்த குழந்தை அவள் கணவனுடையது அல்ல என குடியிருப்புவாசிகள் கதை சொல்லத் தொடங்குகிறார்கள்… ஒரு குள்ளமான ஆணும், அவனை விட உயரமான பெண்ணும் சேர்ந்து சந்தோஷமான வாழ்வதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.. சின்ன காரணத்தை சொல்லி.. அவர்களை அங்கிருந்து காலி செய்ய சொல்கிறார்கள்..எப்போதும் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த உயரமான பெண்ணைப் பற்றி ஏராளம் வதந்திகளை பேசியபடி காலனி மக்கள் கிளப்பிவிடுகிறார்கள் ; வெயில், மழை எல்லாக் காலங்களிலும் கைகளை உயர்த்தி மனைவிக்கு குடை பிடித்தபடி கணவன் செல்லும் காட்சிஅந்த குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு நகைச்சுவை காட்சி… ‘’குள்ளா, குள்ளா என சிறுவர்கள் கிண்டல் செய்ய, அதை பொருட்படுத்தாமல் தங்கள் காதலில் மெய்மறந்து அந்த தம்பதி சென்று கொண்டிருப்பார்கள்…குழந்தை பெற்று விட்டு அந்தப் பெண் இறந்து போய்விட பிறந்த குழந்தையோடு, அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் குள்ளனும் குழந்தையும் வசிக்கத் தொடங்குவார்கள்,அவர்கள் உள்ளே என்ன செய்கிறார்கள் என குடியிருப்பு முழுக்க பரபரப்பாக இருக்கும்… ஒரு மழை நாளில் அந்தக் கதவு திறக்க… குழந்தையோடு குள்ளன் வெளியே வருவான்… இடது கையில் குழந்தையை அணைத்தபடி வலது கையால் குடையை உயர்த்திப் பிடித்து, வலப்புறம் குடைக்கு கீழே இடம் கொட்டும் மழையில் அவன் நடக்கத் தொடங்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியோடு முடிகிறது இந்த நான்காம் கதை.

ஐந்தாம் கதை ;
பயணம் மேற்கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்குமான காதலே இந்த படம் 


ஐந்து கதைகளில் மேக்கிங்கில் பட்டையை கிளப்பும் படம்... நம்ம ஆள் பகத் பாசில் பட்டையை கிளப்பியிருக்கிறார் ; இரவு முழுக்க தொடங்கும் பயணம் ஒன்றில் இவருக்கும் இவர் மனைவிக்குமான அலைபேசி உரையாடல்களில் தெறிக்கும் காதலும் மனம் முழுக்க செய்யப்போகும் வெளிநாட்டு கஸ்டமர் ஒருவனுக்கு கடத்தல்  வேலையில் உள்ள சிக்கல்களும் இடையே தனது பழைய காதலியுடன் தவறு செய்ய கிடைக்க சந்தர்ப்பமும் இவ்வளவு உணர்ச்சிகளை ஒரே முகத்தில் கொண்டுவந்து மனிதர் அநாயசமாக நடிப்பில் பின்னியெடுக்கிறார் இது போல ஒரு குறும்படத்தை வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டீர்கள்; அவ்வளவு அருமை.. தப்பான எண்ணங்களும் தவறான சந்தர்ப்பங்களும் அமைந்தாலும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்த ஒரு பெண்ணின் நேசம் போதுமானதாய் இருப்பதை பேசும் படம் ஆக ஐந்து கதைகளை கோர்த்த இந்த அற்புதமான படத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள் நீங்கள் நல்ல சினிமாவால்  இரட்சிக்கப்பட்டவர்களாவீர் !!!!!


Saturday, November 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)






திரைக்கதையில் நிறைய வகை உள்ளது அதன் அத்தனையும் சராசரி ரசிகர்களான நமக்கு பரிச்சயம் ஆனதும் கூட..
 
ஒரு பார்வையாளனை ஒரு திரைப்படம் எதுவரை இழுத்து செல்லமுடியும் எந்த வகையில் எப்படி , எங்கெல்லாம்  இழுத்து செல்ல முடியும் என நமக்கு நிறைய பரிச்சியம் இல்லாத சினிமாவை நான் தமிழில் பார்த்ததில்லை மற்ற மொழிகளில் பார்த்திருக்கிறேன்

எப்படியும் பரிச்சயமான ஒரு கோணத்தில் தான் இருக்குமென எதிர்பார்க்காமல் போனது எவ்வளவு தவறு என நான் நினைத்த ஒரே படம் இந்த படமாகத்தான் இருக்கும்

இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இளையராஜா எனும் தேவ தூதுவனின் இசையோடு முக்கிய இரு கதாபாத்திரங்களின் குணத்தை மேம்போக்காக காட்டியபடி அவர்களுடன் பார்வையாளனையும் சேர்த்துக்கொண்டு (என்னையெல்லாம் தரதரவென இழுத்துக்கொண்டு)   திசை புரியாமல் அடுத்து என்ன எங்கே எப்படி என கதாபத்திரங்களின் பின்னால் ஆயிரம் கேள்விகளோடு துரத்த வைக்கிறது 
சில சமயம் மூச்சிரைக்க ஓடவும் வைக்கிறது மெய்மறந்த ஓட்டத்தின் போது தொனித்து அலறியபடி  ஓலமிட்ட நம் அத்தனை கேள்விகளுக்கும் பெரியவனாய்(பெரிய இவனாய்) நமக்குள் இருக்கும் சினிமா ரசிகனை தலையில் தட்டி உட்காரவைத்து ஒரு சிறு  குழந்தையாய் மாற்றி நெகிழ்வோடு இரண்டு மெழுகுவத்திகளுக்கிடையில் மிஷ்கின் பிளாஷ்பேக்கை விவரிக்கும் அந்த ஒரு காட்சி தரும் உணர்வை எழுத்தில் சொல்லமுடியாது 

கணக்கவைக்கும் அந்த அற்புதமான நொடியை ரசித்து விடுங்கள் கூடவே மனிதம் விதைக்கும் மீதிபடத்தையும் ..

முந்தைய தோல்வியால் வந்த  கோபத்தின் வெளிப்பாடு என்று மிஷ்கினை சொல்லமுடியவில்லை ஒரு சறுக்கலுக்கு  முன் தமிழ்சினிமாவை நிறைய  உயரம் ஏற்றிவிட்டவர்  இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் தமிழ்சினிமாவை வானம் தொடவைத்து விட்டார் !!


 இந்த பதிவு விமர்சனம் அல்ல பார்வை மட்டுமே :))

Monday, October 28, 2013

மகளதிகாரம்



                                                            



                         
                                                

                                          



                                         



சூனியக்காரியிடமிருந்து 
எப்படியும் 
மீட்டுவிடுவேன் என்று 
பாதி கதையிலே 
தூங்கிப்போகிறாள் 
ராஜகுமாரி !!!!!!