Tuesday, April 7, 2015

A Short Film About Love (1988) - துப்பறியும் அன்பு


யாவும் கடந்து போன, போய்க்கொண்டே இருக்கும் இந்த வாழ்வில்.. எதோவொரு பொழுது எதோ ஒரு வஸ்து நமக்குள் சில  தருணம் திரும்பிப்பார்த்தலையும், நின்று நிதானித்து நினைத்துப்பார்த்தலையும் நிகழ்த்துகிறது.. பெரும்பாலும் மிக உன்னத சினிமாக்களே அப்படியான ஒரு வஸ்தாக இருக்கிறது..  அந்த உன்னத கட்டமைப்பிற்குள் உட்கார்ந்து கிளரச்செய்யும் அற்புத சினிமாக்களுள் ஒன்றே இந்தப்படமும்..

அனேக ஆண்களின் பால்யத்தில் என்னவென தெரியாத நிலையை.. எதிர்ப்பால் மீதான ஈர்ப்பை... உச்சி முதல் உள்ளங்கால் வரை நிரம்பி நிற்க்கும் ஒரு இனம் புரியாத அன்பை.. கடத்தியது சமவயதல்லாத எதோ ஒரு தேவதையாகத்தான் இருக்கும்.. அப்படியானா ஒரு தேவதையின் நினைவை மிக அற்புதமாக இந்தப்படம் நமக்குள் நிரப்புகிறது.

இந்த உலகில் எல்லையற்றது அன்பு மட்டுமே என பேசும் எனக்கு மிகப்பிடித்த சில படங்களின் பட்டியலில் இந்த படத்திற்க்கு ஒரு முக்கிய இடமுண்டு.

Friday, April 3, 2015

எங்கிருக்கிறது ??




எனது நானாக
இருக்கும்போது 
சிக்கல் உங்களுடையதாகவும் 
உங்களது நானாக
இருக்கும்போது 
சிக்கல் என்னுடையதாகவும்
இருக்கின்றன

எவரின் எவராகவும்
இல்லாமல் இருக்க கிடைக்கும்
சிக்கல் எங்கிருக்கிறது ??

#கர்ணாசக்தி