Saturday, March 29, 2014

குக்கூ ( 2014) - WONDER...WONDER....








எது சினிமா?ன்னு ஒரு கருத்தரங்கம் சரியாக ஒருவருடத்திற்குமுன் எழுத்தாளர் பாமரன் தலைமையில் கோவையில் நடந்தது சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றி மாறன் எழுத்தாளர் ராஜுமூருகனும் கலந்துக்கிட்டாங்க..

வழக்கம் போல பாமரன் இயக்குனர் பாலச்சந்தரை கலாய்க்க வெற்றிமாறன் உலகசினிமான்னு பேச படு திராபையாக நடந்த கூட்டத்தில் இறுதியாக பேசவந்தார் ராஜுமூருகன் எளிமையான மனிதர்களின் அன்பை வட்டியும் முதலுமாக தந்தவர் பேச்சில் நகைச்சுவை களைகட்டியது அவர் சொன்னதாவது ..
                               
                           ஆரம்பகாலங்களில் விகடனில் வேலை செய்தபோது விகடன் விமர்சன  குழுவில் இருந்தேன் நாந்தான் ஜூனியர் என்பதால் அவ்வளவாக பரிச்சியம் இல்லாத புதுமுகங்கள் நடிக்கும் மொக்கையாக இருக்கும் எல்லா படங்களையும் நாந்தான் பாத்து விமர்சனம் எழுதி தரனும் இதான் என்வேலை அந்த விமர்சனமும் வெளிய வராது அந்த படமும் 3 நாளுக்கு மேல ஓடாது இப்படியாக தமிழ் சினிமாவின் ஆக சிறந்த மொக்கைப்படங்களுக்கு நிறைய வெளிவராத விமர்சனம் எழுதி ஓஞ்சு போயிருந்த சமயம் மறுபடியும் பொன்னான ஒரு மொக்கை படம் பாக்க கையில் விமர்சனம் குறிப்போட போயிருந்தேன் யாருமே இல்லாத அந்த தியேட்டர்ல ஆங்காங்கே சில ஜோடிகள் சில்மிசஙகளின் வெகுவாக அரங்கேறியது படத்தையும் ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியல இறுதியாக அந்த படத்துக்கு ஒருவரில விமர்சனம் எழுதினேன் அது என்னன்னா 

 "திரைக்காட்சிகள் சுமார் தரைக்காட்சிகள் சூப்பர் "ன்னு  அரங்கம் மொத்தமும்      வயிறு வலிக்க    சிரித்தோம் 
இவ்வளவு மோசமான படங்களின் அனுபவத்தை கொண்டவரின் முதல் படம் எப்படியிருக்கும்?? 
சந்தேகமே வேண்டாம் நிறைவாகத்தான் இருக்கும் அப்படிதான் இருக்கிறது

கூக்கூ - எனும் அன்பின் பெருங்கூச்சல் 




ஒரு மைனஸ் டெசிபல் அளவு கூட
விரசம், கவர்ச்சி, வன்முறை, ஆபாசம், கலவாமல் இரு எளிய இதயங்களின் அன்பின் ஊடாக நெகிழவைக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலின் பெருங் காணமே இந்த கூக்கூ


டைட்டில் முதலே ஆச்சரியப்படுத்துகிறது இந்த காவியத்தின் பரவிகிடக்கும் காட்சி கவிதைகள் இந்த படத்தை விமர்சிக்க எதுவுமில்லை பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது 


பார்வயற்ரோர் உலகத்தில் நம் கை பிடித்து மெதுவாக நடக்க வைக்கும் கதைக்களம்  

Acting is Not a Reacting It is Behaving - இந்த வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்துக்கும் அட்டகாசமாய் பொருந்தும் உடல்மொழி கலைஞன் தினேஷ்

ஏதுமறியா கண்களை கொண்டு எல்லாம் பேசும் நாயகி மாளவிகா

ஆங்காங்கே பின்னனியில் தோகை விரித்து கரையும் இளையராஜா

படம் நெடுகஅன்பின் மொழியை, அரசியல் நக்கலை, வாழ்வியல் நேர்த்தியை, மனங்களின் கூரூரங்களை குருவி கூட்டமாக கீச்சும் இளங்கோ,சங்கீதா,சந்திரபாபு,முருகதாஸ்,எம்ஜியார், வொன்டர் பாதர், தல தளபதி, அச்சகஅசோகன்,பிரைம் மினிஸ்டர், கவர்னர், பேஸ்புக் சமூக போராளிகள், என சிலிர்க்க வைக்கும் கதை மாந்தர்களோடு எலெக்ட்ரிக் டிரைன், மழைக்காலசென்னை,கூக்கூ வாட்ச்,பிங்க் ஸ்பிரே, என அற்புதமான கதை பிரதேசங்கள்   

பார்வையில்லாத நாயகன் எந்த அடுக்கும் இல்லாது வந்தபடியே தன் கனவை விவரிக்கும் போது திரையில் விரியும் இருட்டு , 
முதியவரின் புல்லாங்குழலிருந்து ரயில் ஒன்று  வெளிவரும் காட்சி கோணம் லவ்பேர்ட்ஸ் கூண்டுக்குள் காது வைத்து கேட்கும் காட்சி..

ஆகாசத்த, ஒத்த நொடியில தான்.. மனசுல சூரக்காத்‌தே , என குயிலை நினைவுறுத்தும் மெல்லிசை பாடல்கள் 

உறுத்தலில்லாத ஒளிப்பதிவு 

என இந்த காவியத்தோடு  உறவாடும் 3 மணி நேரமும் உன்னதமானது


 படத்தில் வரும் பாதிரியார் சொல்வது போல.... 

குக்கூ   WONDER.....WONDER.....WONDER.........


 



Monday, March 24, 2014

D-DAY (2013) ஒரு பகிர்வு








THE OPERATION GOLDMAN - இந்தியாவில் பல இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தாவூத் இப்‌ரஹீமை பிடித்து வர ரா உளவுத்துறை அதிகாரி அவினாஷ்(நாசர்) நாலு ஏஜெண்ட அனுப்பறாரு(அதுல ஒரு பொண்ணு) இவங்க நாலு பேரும் பாகிஸ்தானியா மாறி திட்டம் போடறாங்க இந்த ஆபரேசன் பேர் தான் operation goldman.... ப்பா.... புதுமையான கதைக்களன் அட்டகாசமான கதையாடல் ரெண்டும் ஒன்னா சேர்ந்த நேர்த்தியான படம், இதுல OPERATION GOLDMAN-முன்** OPERATION GOLDMAN-பின்ன்னு 2 கட்டமா பரபரன்னு நகருது திரைக்கதை.. இர்பான்கான் அவங்க மனைவி குழந்தை, அர்ஜூன்ராம்பால் ஸ்ருதிஹாசன் பெண் உளவுஅதிகாரி ஹுமா குரேஷி இவங்களுக்குள்ள நடக்கிற சந்திக்கிற பிரச்சினைனு அட்டகாசமாக மேஜிக் நிகழ்த்தியிருக்கும் திரைக்கதை கிரைம் பிரியர்கள் நல்ல சினிமா விரும்பிகள் எல்லாருக்கும் பிடிக்கும் கேமெரா எடிட்டிங் இசை நிகில் அத்வானியோட மிரட்டல் இயக்கம்னு கம்ப்ளீட் பேக்கேஜ் தவறவிட்றாதீங்க நண்பர்களே இந்த பதிவு எதுக்குன்னா நம்ம தமிழ்சினிமா புண்ணியவான்கள் ஏதோ ஸ்ருதி நடிச்ச பலான படம் மாதிரி விளம்பரம் பண்றாங்க அப்படி எதுவும் இல்லாத நல்ல சினிமா அதை பகிரத்தான் நன்றி _/!\_
சத்தியமா நான் அதுக்காக பாக்கலை :))) 

Saturday, March 8, 2014

இரட்சிக்க படாதாவள்




சிறகுகள் ஒடிக்கப்பட 
கற்களால் அடிபட 
சிதைகளால் சிதைக்கப்பட 
திருமணசிலுவைகளில் 

அறைந்துகொண்டேதான் 
இருக்கிறார்கள் 
இயேசுநாதிகளை !!