Tuesday, July 15, 2014

இயற்கை


ஒரு நீண்ட நெம்புகோல் இருந்தால் இந்த பூமிப்பந்தை நெம்பித்தள்ளியிருப்பேன் என யாரோ ஒரு அறிஞர் சொன்னதாய் என் தந்தை சொல்ல கேட்டதுண்டு உண்மையில் அந்த நெம்புகோல் பேராசை,சுயநலம்,அலட்சியம்,வன்மம்,துரோகம் என வெவ்வேறு பெயர்களில் மனிதர்களிடம் இருந்திருக்கிறது.. மனிதர்களின் ஓட்டு மொத்த நெம்புதல்களை பொறுத்து வந்த இயற்கை ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இசைந்தது என்றே நடந்து முடிந்த ஜனவரி 29,2100 பிரளயத்தை சொல்லாம்

என் குழுவிடம் அளிக்கப்பட்ட இந்த இரண்டு மாத தேடல்களின் முடிவு நமக்கு அத்தனை சாதகமில்லை என்பதை முன்பே தெரிவித்துக்கொள்கிறேன் பெருஞ்சோகமான இந்த கையறு நிலைக்கு முதல் அடிப்படை காரணமும் இனி செய்ய கூடாதவைகளுக்கான முதல் அடிப்படைகள் எனவும் நீங்கள் இந்த அறிக்கையின் முதல் பத்தியை எடுத்துக்கொள்ளலாம்.. ஆகவே நம்மையறியாமலே நாம் வைத்திருக்கும் அத்தனை நெம்புகோல்களையும் இனி தூக்கிப்போட்டுவிட்டு இயற்கை நமக்களித்த இந்த புது கிரகத்தை நாம் இழந்து விட்ட பூமியை விட சிறப்பானதாக இருக்கும்படி உருவாக்குவோம் என கூறிவிட்டு என் திட்ட விவரணைகளை இணைக்கிறேன்

என் தலைமையில் நான்கு குழுவாக பிரித்து அனுப்பப்பட்ட விண்கலன்களின் இறுதி அறிக்கையின் விவரணைகள் கீழ் வருமாறு இணைத்துள்ளேன்

(Nova-345) விவரணை -1

           நோவா345 திரு.மைக்கெல் & திரு. டகுஷிமா அவர்களின் தலைமையில் பூமியின் முந்தைய நகரமான ஜப்பானிலிருந்து  ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பிப்பரவரி 05.2100ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தன் சேவையை தொடங்கியது.... இந்த நோவா345 விண்கலத்தின் ஓயாப்பெரு இன்ஃப்ரா ரெட் தேடல் வேட்டைகளின் முடிவில் தரப்படும் இறுதிஅறிக்கையாவது -
ஜனவரி 29ல் இந்த பகுதிகளில் நிகழ்ந்திருந்த உலகின் மிகப்பெரிய சுனாமிக்கு பிறகு கடல் ஒரு நிலப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை மொத்த கடலும் கண்டம் இடம் பெயர்தை போல மொத்தமாக இடம்பெயர்ந்து விட்டது மேலும் கடல் உறைந்த நிலையில் இருப்பதால் இங்கு எந்த உயிரினமும் இருப்பதற்கான சாத்தியம் தென்படவில்லை இந்த இரண்டு மாத தேடல்களின் முடிவில் நோவா345 இங்கு எந்த உயிரினமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறது
- நோவா345,மார்ச் 31.2100

(Taitan555) விவரணை-2 :

திரு.டேம் வில்லியஸ் & திரு.பேடரிக் தலைமையில் டைட்டன்555 விண்கலம் வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டம் முழுதும் தனது சேவையை பிப்பரவரி 05.2100ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் தன் சேவையை தொடங்கியது ஜனவரி29.2100 சம்பவம் அருகிலிருந்த அண்டார்டிகா கண்டம் முழுமையும் கரைத்து கடலில் கலந்தது அந்த பெரும்கடல் அமெரிக்க கண்டம் முழுமையும் சூழ்ந்தது மட்டுமன்றி 12 எரிமலைகளின் தொடர்ச்சியான வெடிப்பில் கடல் நீரும் லாவா குழம்பும் சேர்ந்து இங்கு எந்த நிலப்பகுதியையும் உயிரனங்களையும் விட்டு வைக்கவில்லை மேலும் டைட்டன்555 இன்ப்ராரெட் ஸ்கேனிங் சிஸ்டம் எல்லா நிலப்பகுதியையும் இந்த இரண்டு மாத காலத்தில் தேவையான அளவு அலசிப்பார்த்தும் இந்த பகுதியில் எந்த உயிரினமும் வசிப்பதற்கான சாத்தியம் இல்லையெனவும் பிரளயத்திற்கு பின் ஒருவரும் தப்பிப்பிழைக்கவில்லை எனவும் திடமாக தெரிவித்து திரும்புதலுக்கான சமிக்ஞைகளுக்கு காத்திருக்கிறது -நன்றி டைட்டன்555 மார்ச் 31.2100

(eva525) விவரணை-3

திரு.ஜோர்டான் & திரு.பிரான் ஸ்னேதம் தலமையில் ஈவா525 விண்கலம் தனது சேவையை பிப்பரவரி 05.2100ஆம் தேதி அன்று ஆப்ரிக்க ஐரோப்பிய கண்டம் முழுதும் அதிகாலை 5மணிக்கு தொடங்கியது.. ஜனவரி29,2100 சம்பவங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக பரவிய பெரும் காட்டுத்தீ ஆப்ரிக்க கண்டத்தை முழுமையாக எரித்து பெரும் சாம்பல் காடாக மாற்றிவிட்டது இந்த வெளியெங்கும் பரவியிருந்த சாம்பல்கள் எந்த உயிரினத்தையும் விட்டு வைக்கவில்லை மேலும் ஐரோப்பிய கண்டங்களில் எற்பட்ட தொடர்ச்சியான 25ரிக்டர் அளவுகொண்ட நில நடுக்கங்கள் சீட்டுக்கட்டுகளை களைப்பது போல ஐரோப்பியா முழுவதையும் களைத்து விட்டிருந்தது ஆப்பிரிக்காவின் பெரும் சாம்பல் புயல்கள் வளிமண்டலம் முழுமையும் கலந்து ஐரோப்பியா முழுதும் வீசியிருந்த காரணத்தினால் நில நடுக்கங்களுக்கு தப்பிய மக்களும் சுவாசிக்க திணறி உயிரை விட்டிருக்கின்றனர் இயற்கையின் இவ்வளவு கோர ஆட்டங்களுக்கும் முன் தாக்குப்பிடிக்க எந்த உயிரினங்களும் திராணியற்று மடிந்திருக்கின்றன மேலும் வின்கலத்தின் அல்ட்ராஇன்ப்ரா ரெட் ஸ்கேனிங் முறையில் சலித்துப்பார்த்து தேடிய இந்த இரு மாத தேடல்களின் முடிவில எந்த உயிரினமும் தப்பிப்பிழைக்கவில்லை என திட்ட வட்டமாக தெரிவித்து திரும்புதலுக்கான சமிக்ஞைகளுக்கு காத்திருக்கிறது நன்றி ஈவா525,மார்ச்31,2100

(Adam285) விவரணை-4 :

திரு.சரவணன் & திரு.மக்சூன் மக்கல்ப் தலைமையில் ஆதாம்285 ஆசியா கண்டம் முழுதும் பிப்பரவரி 05.2100ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தனது சேவையை தொடங்கியது ஜனவரி29ஆம் தேதி நடந்த இயற்கையின் பெரும் பிரளயம் ஆசிய கண்டத்தை பொருத்தவரையில் பேரழிவுகளை நான்குமுனைத்தாக்குதல்களாக அரங்கேற்றியிருந்தது பாலைவனம் சூழ்ந்த நாடுகளை மொத்தமாக உள்ளிழுத்து புதைகுழிகளாக மாறியிருந்தன பாலைவனங்கள்.. சில பகுதிகளில் கடல்தான் இரண்டாம்முனை தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது பெரும்பாலும் ஜப்பான் தொடங்கி ஆஸ்திரேலியா முழுதையும் மூழ்கடித்த அண்டார்டிகாவின் கடல்தான் இங்கும் தனது எச்சங்களை கொண்டு இந்த பிரளயங்களை நிகழ்த்தியிருக்கின்றன மேலும் மற்ற நாடுகளில் இயற்கை நிகழ்த்திய தாண்டவங்களை ஓப்பிடும்போது இந்தியா போன்ற  நாடுகளில் இயற்கையின் தாக்கம் குறைவே எனினும் முன்னெச்சரிக்கை இல்லாத அனு உலைகள் இந்த நாடுகளை பெரும் விபத்துக்குள்ளாக்கியுள்ளன நில  நடுக்கங்களின் உண்டான அதிர்வுகளில் ஏற்பட்ட அனுக்கசிவில் இறந்த உயிர்களே அனேகம்..மேலும் உச்சமாக மூன்று விண்கற்களின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இலங்கை நாடு முழுவதையும் பற்றியெரிய வைத்துள்ளது பாலைவனங்களில் கடல்களில் அனுக்கதிர்களில் விண்கற்கள் தாக்குதல் நடந்த இடங்களில் என கடந்த இரு மாதங்களாக ஊடுருவி அலசிய எங்கள் அல்ட்ரா இன்ப்ராரெட் ஸ்கேனிங் ரிப்போர்ட்களின் படி இங்கு எந்த உயிரினங்களையும் கண்டு பிடிக்கவில்லையென உறுதிப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம் -நன்றி ஆதாம்285,மார்ச்31.2100

பிப்பரவரி 02.2100ஆம் தேதி  அன்று அமெரிக்காவின் எனர்ஜி கார்ப்ரேசன் அளித்த இந்த ஆப்ரேசன் சோல் (soul) வேலையின்முடிவை மேற்கண்ட விவரணைகளை கோர்த்து எங்கள் குழு சார்பாக ஆப்ரேசன் சோல் இறுதி அறிக்கையாக இந்த அறிக்கையை சமர்ப்பித்து விண்வெளித்தளத்திற்க்கு திரும்புதலுக்கான சமிக்ஞைகளுக்கு காத்திருக்கிறோம் - நன்றி
மிஸ்டர் கே.சரவணன்
சீப் ஹேட் ஆப்ரேசன் சோல்

என விண்கத்தின் தொடுதிரை கணினியில் மொத்த அறிக்கையையும் சரவணன் பதிவேற்றியிருந்தான்...

தொடர்ச்சியான இந்த இரண்டுமாத தேடல்களின் முடிவில் உலகின் மிகப்பெரிய பிணவறைக்கு சென்று வந்த வெம்மை நிறைந்திருந்தது அவன் கண்களில் 

எத்தனை பெரிய இழப்பு இந்த பூமியில் உண்மையில் நடந்தேறிய இந்த பிரளயத்தின் முதல் குற்றவாளி யார்? இயற்கையா ? இயற்கையை சுய நலத்திற்காக பராமரிக்காமல் விட்ட மனிதர்களா? நாடுகளுக்கிடையே பரவியிருந்த வன்மங்களா? அல்லது இந்த பேரழிவின் கோரமுகத்தை முன்கூட்டியே அறிந்து அமெரிக்கா & ரஷ்யாவின் கூட்டு தளமான ஸ்பேஸ் சொசைட்டியில் தஞ்சம் புகுந்த மில்லினியர்களா? அல்லது அவர்களை மட்டும் அழைத்துகொண்ட என் பெரு ஸ்பேஸ் ரிசர்ச் முதலாளிகளா ?அல்லது அவர்களிடம் வேலை பார்க்கும் நானா? யாரை எதை குற்றம் சொல்ல.. 

அவன் மனம் அவனை கேள்விச்சாத்தானின் முன்பு கூனி நிக்க வைத்திருந்தது இந்த அறிக்கையை அளித்து விட்டு வேலையை உதறி இந்த பூமியிலே தங்கி விடலாம் அந்த விண்தளத்திற்கு திரும்ப போவதில்லை என மனதுக்குள் எற்கனவே ஒரு முடிவை எடுத்திருந்தான் முக்கியமாக ஓரிறு வார்த்தைகூட தன் தாய்மொழியில் பேச யாருமற்ற ஒரு இயந்திர உலகில் அவன் இனி வாழ விரும்பவில்லை அதற்காகவே சரவணனிடம் தமிழகம் சென்று தற்கொலை செய்து கொள்ளவும் ஒரு எண்னமிருந்தது ராஜினமா கடிதத்தோடு அந்த தற்கொலை கடிதத்தையும் ஏற்கனவே எழுதி வைத்திருந்தான் இந்த இரு கடிதமும் பிப்பரவரி 15 அன்று எழுதப்பட்டது... 

அன்றுதான் இந்த விண்கலம் தனது இன்ப்ரா ரெட் அலைவரிசையில் உயிருடன் ஒரு சிறுமியை கண்டுபிடித்திருந்தது உடனடியாக ரோபோக்களுக்கு கட்டளையிட்டு அந்த சிறுமியை கலத்திற்கு தூக்கிவருமாறு சொல்லியிருந்தான்  ஆச்சர்யமாக அடிவயிற்றின் சிறு கீறலில் வெளியே நீட்டியிருந்த குடலையும் இரத்தபோக்கையும் மீறி அந்த சிறுமி உயிருடன் இருந்தாள், முதலுதவி அளித்த அடுத்த அரைமணி  நேரத்திற்குள்ளாக அவளின் உயிரை பறித்த இயற்கையின் மீது வந்த பெரும் கோபத்தில் எழுதிய கடிதம் அது.. இதோ இந்த கடைசி தேடலும் முடிந்து இந்த ஆபரேசனின் இறுதி வடிவத்தை தயாரித்திருந்த போது அந்த தற்கொலை எண்ணம் இன்னும் திடமாக அவனுள் விஸ்வரூபம் எடுத்திருந்தது

அறிக்கையின் பெறுநர் இடத்தில் அமெரிக்கன் எனர்ஜி கார்ப்ரேசன் & ரஷ்யன் ஸ்பேஸ் சொசைட்டி முகவரிகளை பதிவிட்டு விட்டு SEND பட்டனை அழுத்தும் முன் லேசாக இருக்கையில் சாய்ந்து பெரு மூச்சை விட்டு தளர்ந்தான்

விண்கலத்தின் சாட்டிலை ஃபோன் அலறியது சரவணன் நிதானமாக ஃபோனை எடுத்தான்

"சரவணன் உடனே என் அறைக்கு விரைந்து வா""மக்கல்ப் உற்சாக குரலில் சொன்னான்

மக்கல்ப்பின் அறைக்கதவை திறக்கும் முன்னே அவனது குரல் என் செவியை அடைந்திருந்தது "நம்ப முடியவில்லை சரவணா ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் இதோ நமது ஸ்கேனிங் பிராசஸ் முப்பது உயிர்களை கண்டுபிடித்துள்ளது"

"நிஜமாகவா சொல்கிறாய் மக்கல்ப்"

"மடையா விளையாடும் நிலையிலா நாம் இருக்கிறோம் வந்து பார்"

"ஆம் மிக சரியாகவே காட்டுகிறது முப்பது உயிரினங்கள் மெதுவாக நடந்த படி இருக்கிறார்கள் அருகில இருந்த பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் அதுவும் மனிதர்கள் முக்கியமாக தமிழர்கள்" றக்குறைய அலறியே விட்டேன்

"எப்படி தமிழர்கள் என சொல்கிறாய் மேன்? "

"இதோ அந்த லொகேசனை வைத்துதான்"

"லொகேசசன் இலங்கை மட்டகளப்பு என்றல்லவா காட்டுகிறது ? "

"மடையா அது உனக்கு புரியாது தெளிவாக பிறகு சொல்கிறேன்"

"உன் கண்களில் வெளிப்படும் கண்ணீர் ஒரு பெரும் சோக கதையை சொல்லப்போகிறதென அவதானிக்கிறேன்"

"சரவணன் வாய் நிறைய புன்னகையுடன் மக்கல்ப்பை தழுவிக்கொண்டான்"

"மேன் உடனே அங்கு நம் கலத்தை செலுத்து மேலும் மற்ற கலங்களுக்கு இங்கு வர உத்திரவிடு"

"மக்கல்ப் சொன்னான் இந்த லொகேசனை குறிப்பிட்டுவிட்டேன் இது என்ன இடமென்று சமிக்ஞையிட"

"ஈழம் என பெயரிடு" தடுக்க இப்போது எவன் இருக்கிறான் ??

"ஈழமா?...... சரி இட்டேன் உண்மையில இந்த பிரளயத்திலிருந்து தப்பித்த
அந்த மக்கள் கடவுளின் குழந்தைகள் அதன் அர்த்தம்தான் ஈழமா ?"

"ம்ம்ம்ம் அப்படியும் சொல்லாம் கடவுளின் குழந்தைகள் என்பதை விட அவர்கள் சாத்தானால் சபிக்கப்பட்டு மீண்டெழுந்த கடவுள்கள் அப்படியாக கூட ஒரு அர்த்தம் வைத்துக்கொள் அவர்களுக்கு பிரளயங்களில் நிறைய முன் அனுபவம் உண்டு .... அதில் பலி கொடுக்கப்பட்ட உயிர்கள் ஏராளம் எஞ்சிக்கிடைத்த இவர்கள் கடவுள்கள்தான் மேலும் அவர்கள் அனைவரும் என் இனம் 

" நீ கொடுத்து வைத்தவன் சரவணா' என்றபடி மக்கல்ப் கண் கலங்கினான்"

அவன் நெற்றியில் முத்தமிட்டு சரவணன் சொன்னான் " மன்னித்து விடு சகோதரா அவர்கள் நம் இனம் "

பதிவேற்றியிருந்த இறுதி திட்ட அறிக்கையை அழித்து உயிரினங்களை கண்டுபிடிக்க மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்டு புது மின்னஞ்சலை ஸ்பேஸ் சொசைட்டிக்கு அனுப்பிய பின்  ராஜினமா கடிதத்தையும் தற்கொலை கடிதத்தையும் அழித்து விட்டு உற்சாகமா சீட்டியடித்தான் சரவணன்.

...................................................................................................................................................................


2 comments:

  1. முதல்ல, தமிழில் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் எழுதினதுக்காக பிடிங்க பாராட்ட!! நிறைய தவிற்க்க முடியாத வார்த்தைகள் ஆங்கிலம் என்பதால், அன்னியப்பட்டு போகும் அபாயம் அதிகம். எனினும், முடிந்த வரை நல்ல தமிழில் தர முயற்சித்திருப்பதற்க்கும், கதையை உணர்ச்சிப்பூர்வமாய் அமைத்திருப்பதற்கும் வாழ்த்துகள்..

    சில சின்ன சின்ன குறைகள் கண்ணில் தென்படுகின்றன -
    * வாக்கியங்கள் முற்றுப்புள்ளி, கமா என எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைத்து, படிப்பவரை உண்டு இல்லை என்று பண்ணுகிறீர்கள். நடிகர் கமலஹாசன் பேச்சை 2 மணி நேரம் கேட்ப்பது போல் படுத்தலாய் இருக்கிறது.

    * ல/ள, ன/ண எல்லாம் கவனிக்கவும். விருந்து என்று வந்துவிட்டால் சிறு கல்லும் ஏற்பதற்கில்லை. அனுசக்தி/ அணுசக்தி

    * உரையாடல் தவிர்த்த வாக்கியங்களும் quotationக்குள் வந்து குழப்பத்தை உண்டு பண்ணுகின்றன - //"சரவணன் வாய் நிறைய புன்னகையுடன் மக்கல்ப்பை தழுவிக்கொண்டான்"// ”..மக்கல்ப் கண் கலங்கினான்"//

    ஆயினும், சில வாக்கிய பிரயோகங்கள் பிரமாதம். உ.ம் - சாத்தானால் சபிக்கப்பட்டு மீண்டெழுந்த கடவுள்கள்!

    வாழ்த்துகள் கர்ணா.
    அடுத்தப்பதிவுக்காக இப்போதே காத்திருக்கும்,
    யமுனா

    ReplyDelete
  2. இது முதல் கதையா .?
    அமானுஷ்யம் கதை மாந்தர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம்..
    அதைப் படிக்கின்ற வாசகரை அப்படி ஒரு நிலையில் கொண்டுபோய் நிறுத்தி விட்டீர்கள்.
    அற்புதமாய் நகர்த்தி இருந்தாலும் சிறு உரையாடல்கள் சுவராஸ்யமாய் இருந்திருக்கும்.
    நெருஞ்சி முள் குத்திய சுகமாய் ஈழம் என்ற நெருடலுடன் முடிவு.
    இன்னும் பல கருக்கொண்டு உதிர்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete