திரைக்கதையில் நிறைய வகை உள்ளது அதன் அத்தனையும் சராசரி ரசிகர்களான நமக்கு பரிச்சயம் ஆனதும் கூட..
ஒரு பார்வையாளனை ஒரு திரைப்படம் எதுவரை இழுத்து செல்லமுடியும் எந்த வகையில் எப்படி , எங்கெல்லாம் இழுத்து செல்ல முடியும் என நமக்கு நிறைய பரிச்சியம் இல்லாத சினிமாவை நான் தமிழில் பார்த்ததில்லை மற்ற மொழிகளில் பார்த்திருக்கிறேன்
எப்படியும் பரிச்சயமான ஒரு கோணத்தில் தான் இருக்குமென எதிர்பார்க்காமல் போனது எவ்வளவு தவறு என நான் நினைத்த ஒரே படம் இந்த படமாகத்தான் இருக்கும்
இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இளையராஜா எனும் தேவ தூதுவனின் இசையோடு முக்கிய இரு கதாபாத்திரங்களின் குணத்தை மேம்போக்காக காட்டியபடி அவர்களுடன் பார்வையாளனையும் சேர்த்துக்கொண்டு (என்னையெல்லாம் தரதரவென இழுத்துக்கொண்டு) திசை புரியாமல் அடுத்து என்ன எங்கே எப்படி என கதாபத்திரங்களின் பின்னால் ஆயிரம் கேள்விகளோடு துரத்த வைக்கிறது
சில சமயம் மூச்சிரைக்க ஓடவும் வைக்கிறது மெய்மறந்த ஓட்டத்தின் போது தொனித்து அலறியபடி ஓலமிட்ட நம் அத்தனை கேள்விகளுக்கும் பெரியவனாய்(பெரிய இவனாய்) நமக்குள் இருக்கும் சினிமா ரசிகனை தலையில் தட்டி உட்காரவைத்து ஒரு சிறு குழந்தையாய் மாற்றி நெகிழ்வோடு இரண்டு மெழுகுவத்திகளுக்கிடையில் மிஷ்கின் பிளாஷ்பேக்கை விவரிக்கும் அந்த ஒரு காட்சி தரும் உணர்வை எழுத்தில் சொல்லமுடியாது
கணக்கவைக்கும் அந்த அற்புதமான நொடியை ரசித்து விடுங்கள் கூடவே மனிதம் விதைக்கும் மீதிபடத்தையும் ..
முந்தைய தோல்வியால் வந்த கோபத்தின் வெளிப்பாடு என்று மிஷ்கினை சொல்லமுடியவில்லை ஒரு சறுக்கலுக்கு முன் தமிழ்சினிமாவை நிறைய உயரம் ஏற்றிவிட்டவர் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் தமிழ்சினிமாவை வானம் தொடவைத்து விட்டார் !!
இந்த பதிவு விமர்சனம் அல்ல பார்வை மட்டுமே :))
முந்தைய தோல்வியால் வந்த கோபத்தின் வெளிப்பாடு என்று மிஷ்கினை சொல்லமுடியவில்லை ஒரு சறுக்கலுக்கு முன் தமிழ்சினிமாவை நிறைய உயரம் ஏற்றிவிட்டவர் இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் தமிழ்சினிமாவை வானம் தொடவைத்து விட்டார் !!
இந்த பதிவு விமர்சனம் அல்ல பார்வை மட்டுமே :))

No comments:
Post a Comment