Wednesday, June 25, 2014

கொள்ளைக்காரர்களுக்கு நடுவில் ஒரு தேவன்


உங்க குழந்தைய எந்த ஸ்கூல்ல சேத்திருக்கிங்க ??

அனேக பெற்றோரிடமிருந்து வருகிற பதில் இதுவாகத்தான் இருக்கும்…

நான் என் பையன / பொண்ண கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டில, ப்ரோக்ளின் யுனிவர்சிட்டில தான் சேத்தியிருக்கேன் ரீதீயில் ஒரு பள்ளி பெயரும் கூடவே பீஸ் நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் அறுபதாயிரம்னு பதில் நீண்டு அவர்களின் கண்களில் க்ளீங்கென்று ஒரு சத்தத்துடன் லைட் எரியும்… இத்தகைய பெரிய பள்ளிகளில் படித்தால் மகனும் மகளும் பெரிய ஆள் ஆகிடுவார்கள் என பெற்றோர்களுக்கு மூடநம்பிக்கை பேராசை இத்தியாதி இத்தியாதி என அடிப்படை காரணங்கள் நிறைய உண்டு இப்படிபட்ட பெற்றோர்கள்தான் கொள்ளை கூட்டங்களின் வளர்ச்சிக்கு முதல் வித்து…

எங்கள் நிறுவனத்தின் தரத்தை பாரீரென ஊர் முச்சந்தியில் அவர்களின் பம்புசெட்டுகளை போட்டோ எடுத்து பிளெக்ஸ் போட்டு நிக்க வைக்கிற அதே பம்புசெட் மேனுபேக்சரிங் கம்பெனிகளின் எத்திக்ஸோடுதான் சில தனியார் பள்ளிகளும் இப்பபோது இயங்கிக்கொண்டிருக்கிறது உற்பத்தி செய்ய வேண்டிய பொருள்களுக்கு எவ்வளவு ரா மெட்டிரியல் தேவைப்படும் என்னென்ன இன்ஸ்ட்ருமெண்ட் கருவிகளின் பயன் தேவைப்படும் என எல்லா தேவை கணக்கு பட்டியல்களையும் இன்வெஸ்டர்களிடம் ஓப்படைத்து கச்சிதமாக கலெக்சனும் செய்து குறிப்பிட்ட டெலிவரி நாட்களுக்குள்ள மெஷினை தயாரித்தனுப்பி அதை செம்மையாக விளம்பரபடுத்தி அடுத்த இன்வெஸ்ட்டர்களை ஈர்ப்பதுதான இந்த மாதிரியான தனியார் பள்ளிகளின் அதிமேதாவிதன யுக்திகள்… இதுபோக டொனெசன் மெடிடேசன் யோகா ராகா சாகாவென்று மொத்தமாக பூ சுத்தி ஒவ்வொரு பம்புசெட்டுக்கும் உபரி செலவு கணக்குகள் காமித்து எல்லா சந்து பொந்துகளிலும் கொள்ளையடிக்கும் சூட்சுமம் தெரிந்த கம்பெனிகள் இவை உள் நுழைபவை யாவும் கூட்ஸுகளாக அனுக மட்டுமே தெரிந்த இந்த கொள்ளைக்கார மேனுபேக்சரிங் கம்பேனிகளுக்கு குறைந்த பட்ச மனிதம் என்பது எந்தளவு இருக்க கூடும் ? 

தேவன் அனுப்பிய தேவதைகள் ;-

சென்ற பாரா மாதிரியான ஒரு பம்பு செட்டை தயார் செய்கிற பள்ளிக்கு மகளை அனுப்ப கூடாதென்று ஒரு தெளிவான எண்ணத்தின் அடிப்படையிலும் அரசு பள்ளியில்  எனக்கு கிடைத்த அனுபவத்தை விட ஒரு பத்து படி அதிகமும் மிக முக்கியமாக எந்த தினிப்பும் அவசரமும் இல்லாமல் அவளின் குழந்தைபருவம் அவளுக்கு அப்படியே கிடைக்க வேண்டுமெனவும் அதற்கு கூடவோ குறையவோ இல்லாமல் அளிப்பது மட்டுமே என்பங்கு என்பதை உணர்ந்திருந்தேன்…..என்னைவிட குறைந்த சம்பளம் வாங்குகிற என் நண்பர்களெல்லாம் அவர்களின் குழந்தைகளை சிபிஎஸ்சி, ரிப்ஸ் போன்ற பெரிய பள்ளிகளில் சேர்த்து 40000, பீஸ் கட்டியதாக பெருமையாக என்னிடம் சொல்லிப்போனார்கள்…. அதைபற்றி எந்த கவலையுமின்றி மகளை வீட்டுக்கு அருகிலேயே உள்ள கிறிஸ்டியன் டிரஸ்டின் கீழ் நடக்கிற ஒரு சின்ன மெட்ரிகுலேசன் பள்ளியில்தான் சேர்த்தேன் அங்கு வருடத்திற்கு மூவாயிரத்துக்கும் குறைவாகத்தான் பீஸ் இருந்தது….மேலும் கார்ப்ரேசனில் வேலை செய்பவர் முதல் காவல் அதிகாரி வரையிலான பலதரபட்டவர்களின் குழந்தைகளும் படிக்கிற பள்ளி அது.. எந்த ஒரு அவசரமும் இல்லாத  நிதானமாக அணுகுற ஒரு வாழ்கையத்தான் அந்த பள்ளியும் மகளுக்கு தந்தது… குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்க்கிற பள்ளியில் சேர்த்த மகிழ்வோடு ஒரு வருடம் கடந்திருந்தது...

சென்றவாரத்தில் ஒரு நாள் எப்போதும் போல மகளை அழைத்துவர சென்றிருந்தபோது மகளின் மிஸ் என்னிடம் சார் நாளைக்கு சஷ்டிகா வீட்டுக்கு நாங்க வருவோம் என சொல்ல நானும் கண்டிப்பாக   வாங்க மிஸ் என சொல்லிவிட்டு வந்தேன் அடுத்த நாள் ஆச்சரியமாக மகளின் ஸ்கூலிலிருந்து ஐந்து டீச்சர்கள் வந்திருந்தார்கள் என்னைப்பற்றி என் வேலை பற்றியெல்லாம் விசாரித்து குறிப்பெடுத்தார்கள் எதற்காகவென குழம்பி பிறகு கேட்டேன்..


எதுக்காக மிஸ் ஸ்டூடண்ட் வீட்டுக்கெல்லாம் விசிட் பன்றிங்க??

ஒன்னுமில்ல சார் இது எங்க ஸ்கூல் ஒரு அசைன்மெண்ட்,,

என்ன அசைன்மெண்ட் மிஸ் ???  

எங்க ஸ்டுடண்ட் ஒருத்தரோட பாதர் சில மாசத்துக்கு முன்ன இறந்து போய்ட்டார் அந்த பையனின் அம்மாவும் வேற யார்கூடவோ ஓடிபோக பாவம் அந்த பையன் அவங்க தாத்தா கிட்ட இருந்துதான் ஸ்கூலுக்கு வந்துகிட்டிருந்தான் ஒரு நாள் அந்த தாத்தா ஸ்கூலுக்கு வந்து எங்க பிரின்ஸி சிஸ்டர்கிட்ட இந்த கதையெல்லாம் சொல்லி ஒரு ஏடிஎம் செண்டரில் மாசம் மூவாயிரம் சம்பளம் தான் மேடம் வாங்கறேன் பையன படிக்க வைக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருக்கார் பிர்ன்ஸி மேடம் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு அந்த பையன் படிப்பு செலவுக்கு டிரஸ்ட்ல சொல்லி ஏற்பாடு செஞ்சாங்க அப்புறம் ஒரு நாள் டீச்சர்ஸ்கெல்லாம் மீட்டிங் வச்சு இந்த கதைய சொல்லி அடுத்து இந்த மூனு மாசத்துல சனிக்கிழமைகள்ள எல்லா ஸ்டுடண்ட்ஸ் வீட்டுக்கும் போய் சர்வே எடுக்க சொல்லியிருக்காங்க சார் அந்த பையன் மாதிரி கஷ்டபடுற குழந்தைகளுக்கு அவங்க பீஸ்லயும் மத்த உதவி எதாவது தேவைபட்டாலும் செஞ்சு தர டிரஸ்ட்கிட்ட பேசியிருக்கோம் அதான் சார் எல்லா ஸ்டூடண்ட்ஸ் வீட்டுக்கும் விசிட் பன்றோம் அப்ப நாங்க போய்ட்டு வறோம் சார் சஷ்டிகா பை பையென சொல்லிவிட்டு சாதரணமாக வெளியேறினார்கள் 

அவர்கள் புள்ளியாக மறையும் வரையில் தேவன் அனுப்பிவைத்து வீடு வந்து சென்ற சில றெக்கையுள்ள தேவதைகளை நேரில் பார்த்த பிரமிப்பு என்னுள் நிகழ்ந்திருந்தது …

மகள் செகண்ட் ரேங்க் எடுத்து வந்து காட்டிய போது கூட இவ்வளவு நெகிழ்வாக இருக்கவில்லை  இதோ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய இந்த வினாடிகளுக்கு பிறகிருந்து என்னுடைய குழந்தைக்கு படிப்பை மட்டும் இல்லாமல் மனிதத்தையும் கற்றுக்குடுக்கும் ஒரு பள்ளியில் சேர்த்திருக்கிறேன் என இந்த நொடி வரைக்கும் அந்த நெகிழ்வு நீண்டு கிடக்கிறது

மேற் சொன்னவைகளை அந்த நண்பனிடம் சொன்னபோது பரவாலடா எவ்வளவு நல்ல ஸ்கூலென சொல்லிவிட்டு நாப்பதாயிரம் ரூவா புடுங்கினதோட சரி அந்த புடுங்கிக……………………………அவன் மகன் படிக்கும்  சிபிஎஸ்சி பள்ளியை அதி அற்புதமான சில கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஒரு பேரண்ட்ஸ் மீட்டிங் கூட வைக்கிறதில்ல என்று தரையை வெறித்து சொல்லிக்கொண்டிருந்தான் . 

No comments:

Post a Comment