கர்ணாசக்தி
சிறு கைப்பிடி எழுத்து
Wednesday, June 4, 2014
சாயல்
உணவகம் ஒன்றில்
உன் போல ஒருத்தி
உணவருந்துகிறாள்
முள்கரண்டி வழியாக மிருதுவாக என்னுள்
இறக்குகிறாள் சில நீள இரவுகளை
சில நீள பகல்களை
பின் முறையே
சில நீளா பகல்களை
சில நீளா இரவுகளை
இறுதியாக
உனை
போலவே
தவறாமல்
கடைசி மிடறில்
பெரு பிரிவை !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment