Sunday, January 5, 2014

மழையாவது




முன்பு பெய்த மழை 
நதியானது என் பால்ய  
கப்பல்களை மிதக்க வைத்து  

பின்னொருமுறை 
பெய்த மழை 
கவிதையானது 
என்னோடு அவளையும் 
நனைக்க வைத்து 

மீண்டுமொருமுறை பெய்த 
மழை சனியன் ஆனது 
என் வேலை நேர்முகத்தை 
தவற வைத்து 

அதற்கடுத்த முறை 
பெய்த மழை 
இரக்கமற்றவன் ஆனது 
சாலை ஒன்றில் என் 
வாகனத்தை செயலிழக்க 
வைத்து 

இந்தமுறை பெய்த மழை 
மத்தாப்பானது 
மகளின் சின்னஞ்சிறு
கைகளில் தெரித்து 

அவசரஅவசரமாக அவளிடம்
மழையை மழையாகவே
எப்போதும் ரசிக்க 
சொன்னேன்
அவள் காதில் வாங்கவில்லை 
கைகளில் 
ஏந்தி கொண்டிருந்தாள் மழையை !!! 




No comments:

Post a Comment